பொத்துவில் அறுகம்பை பாலத்துக்கு அருகில் விபத்தில் 17 வயது இளைஞர் உயிரிழப்பு

Admin
By AdminAugust 16, 2013 21:48Updated

பொத்துவில் அறுகம்பை பாலத்துக்கு அருகில் விபத்தில் 17 வயது இளைஞர் உயிரிழப்பு

பொத்துவில் அறுகம்பை பாலத்துக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை வான் ஒன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் சென்ற 17 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் வாகனசாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என பொத்;துவில் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பொத்துவிலைச் சேர்ந்த 17 வயதுடைய நையூதீன் திஸ்காம் என்பவரே உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அறுகம்பைபாலத்துக்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போது வீதியால் வந்த வான் திடீரென துவிச்சக்கரவண்டியுடன் மோதிவிபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றபோது இடைவழியில்உயிரிழந்துள்ளார்.

வாகன சாரதியை இன்று வெள்ளிக்கிழமை பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளகப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.

Comments
Admin
By AdminAugust 16, 2013 21:48Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
  1. pottuvil.Haleem
    pottuvil.Haleem August 16, 22:12

    INNALILLAHI VAINNAILAIHI RAJIOON.

    Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

16 + thirteen =