பொத்துவில் பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேகநபருக்கு விளக்க மறியல்.

Admin
By AdminApril 27, 2013 11:13

பொத்துவில் பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேகநபருக்கு விளக்க மறியல்.

courtபொத்துவில் பிரதேச கடற்றொழில் பரிசோதகர் எம்.ரி.எம். ஜௌபர் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பொத்துவில் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.

மேற்படி கடற்றொழில் பரிசோதகர் மீது தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் எம்.பி. அலாவுத்தீன் என்பவரை பொத்துவில் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே – எதிர்வரும் 30ஆம் திகதிவரை குறித்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவு வழங்கினார்.

பொத்துவில் பிரதேச கடற்றொழில் பரிசோதகர் எம்.ரி.எம். ஜௌபர் கடந்த செவ்வாய்கிழமை மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கும் பொருட்டு, அவரது காரியாலயத்தில் கடமையினை மேற்கொண்டிருந்தபோது, அலாவுத்தீன் எனும் நபரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலையடுத்து, கடற்றொழில் பரிசோதகர் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு – நேற்று புதன்கிழமை வீடு திரும்பியிருந்தார்.

Comments
Admin
By AdminApril 27, 2013 11:13
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

7 + 6 =