எரிபொருள் நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Admin
By AdminApril 8, 2013 02:14Updated

எரிபொருள் நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் பிரதேச கடற் தொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமயைக் கண்டித்தும், தமது தொழில் நடவடிக்கைக்கான எரிபொருள் நிவாரணத்தினை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும் பொத்துவில் – உல்லை மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது தொழிலிடப் பகுதியில் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.

பொத்துவில் உல்லை பகுதியில் இயந்திர படகுகள் மூலம் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களே – தமது கண்டனங்களையும், கோரிக்கைகளையும் வெளிப்படுத்தும் வகையிலான பதாதைகளை ஏந்திய வண்ணம் மேற்படி கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தமக்கு 09 மாதங்கள் தொடர்சியாக வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியமானது கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வழங்கப்படவில்லை என்று – கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு எரிபொருள் மானியம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் கல்முனை அலுவலத்திலுள்ள மாவட்ட உதவிப் பணிப்பாளரிடம் தாம் முறையிட்டதாக மீனவர்கள் கூறினார்கள்.

இதனைக் கருத்திற் கொண்ட உதவிப் பணிப்பாளர் – மிக விரைவில் எரிபொருள் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்திருந்தார். ஆயினும் – அவர் அவ்வாறு உறுதி வழங்கி – பல மாதங்கள் கடந்தும் இதுவரை தமக்கான எரிபொருள் மானியம் கிடைக்கவில்லை என்று மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

திணைக்களத்தில் பதியப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட படகு மற்றும் தோணி ஒன்றுக்கு – மாதமொன்றுக்காக 9375 ரூபாய் பெறுமதியான முத்திரை  வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Admin
By AdminApril 8, 2013 02:14Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

4 + eight =