- பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்
- பொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா
- மதில்சுவர் சரிந்து சிறுவன் பலி.
- நாடளாவிய ரீதியில் பொத்துவிலில் அதிகளவான மழைவீழ்ச்சி
- கொழும்பு நோக்கி பயணித்த பொத்துவில் பஸ்வண்டி விபத்து, 16 பேர் காயம் (படங்கள் இணைப்பு)
- பொத்துவிலில் 27ம் திகதி சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. தவற விடாதீர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையான சந்திப்பு.
Related Articles

தொடக்கவிழாவில் அமைப்புடன் இணைந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஐக்கிய அமீரகத்தில் பல பகுதிகளில் தொழில் நிமிர்த்தம் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (22) திகதி துபாய் வாபி ஹோட்டலில் இடம்பெற்றது.
அமீரகத்தின் 7 மாநிலங்களிருந்தும் பொத்துவிலைசேர்ந்த பல நண்பர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பலரினதும் ஆசை எதிர்பார்ப்புக்கள் பொத்துவில் ஊரில் எமதுதொடர்புநிலைகள் பற்றி பேசப்பட்டது.
அதன் அடிப்படையில் நண்பர்கள் இணைந்து ஒரு (UAE-POTTUVIL COMMUNITY) அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் வழமையான அமைப்புக்களை விட வித்தியாசமான ஒரு நோக்கத்தில் இந்த அமைப்பின் திட்டங்கள் இருக்கவேண்டும் என பலரும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
ஏனைய நாடுகளில் இப்படியான ஊர் நண்பர்கள் கொண்ட அமைப்புக்கள் உள்ளபோதிலும் உலகின் கம்பீரமான நாடான ஐக்கி அரபு இராஜ்ஜியத்தில் ஒரு பொத்துவில் அமைப்பொன்றின் தேவை பல வருடங்களாக உணரப்பட்டபோதிலும், இதுதொடர்பில் நாம் கடந்த அமீர பொருளாதார நெருக்கடைவின் காரணமாக பின்னடைவில் இருந்திருக்கிறோம்.
தற்போதுள்ள சூழலில் இனியும் இப்படி நாம் தொடர்பற்ற நிலையில் இருப்பதைவிட ஒன்றுசேர்வோம் என எல்லோறினதும் சம்மதத்துடன்; பொத்துவில் – ஐக்கிய அரபு இரசாஜ்ஜிய அமைப்பும் (UAE-POTTUVIL COMMUNITY), இவ் அமைப்பின் தற்காலிக நிர்வாக கட்டமைப்பும் அனைவராலும் தெரிவு செய்யப்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஏனைய பொத்துவில் சகோதர்களும் (UAE-POTTUVIL COMMUNITY) இவ்வமைப்பில் இணைந்துகொள்ளுமாறு இவ்வமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு- 0501681414 (WhatsApp)
https://www.facebook.com/uae.pottuvil/?fref=ts
All the best.
All the best.