‘கல்விக்காக ஓடு’ எனும் தொனிப்பொருளில் நெடுந்தூர ஓட்டம் (மரதன் )

Admin
By AdminMay 24, 2016 01:28Updated

ADFEvint 3பொத்துவில் அறுகம்பை பகுதியினை தலைமையாக கொண்டு இயங்கிவரும் ADF அமைப்பின் ஏற்பாடில் சர்வதேச அளவிலான நெடுந்தூர ஓட்டம் (மரதன் )ஜூலை 17ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கான அறிமுக விழா புளூ வே ஹோட்டலில் அமைப்பின் தலைவர் எம். எச். ஜமாஹின் தலைமையில் நடைபெற்றது.

‘கல்விக்காக ஓடு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள குறித்த மரதன் ஓட்டத்தின் அறிமுகவிழாவில் அதிதிகளாக பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம். முஸர்ரத், ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் பொத்துவில் எ. ஆதம்லெப்பை மௌலவி, முன்னால் தவிசாளர் பிரதேச சபை எம்.எஸ்.எ அப்துல் வாசீத் எம்.சி.எம். ரஹ்மத்துள்ளாஹ் முன்னால் அதிபர் அல் அக்ஸா வித்தியாலயம், வைத்தியர். ரீ. எல் எ. மனாப் வைத்திய அதிகாரி ஆதர வைத்தியசாலை பொத்துவில்,  எச்.ஆர்.எம். ஹலீல் அதிபர் அல் அக்ஸாவித்தியாலம், சுகாதார பரிசோதகர் ஜப்பார்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ADFEvint

குறித்த நிகழ்வில் களந்து கொண்டு உரையாற்றிய பொத்துவில் பிரதேச செயலாளர் ADF  அமைப்பானது சிறந்த முறையில் இப்பிரதேசத்தில் செயற்பட்டு வருகின்றமை பாராட்டத்தக்கது.

உங்களுடைய இந்த நிகழ்வானது சர்வதேச மட்டத்தில் அமைந்துள்ளதையிட்டு பெருமைகொள்கிறேன். எமது பிரதேசம் ஒரு சர்வதேச நகரமாக உருவாக வேண்டும் என்கின்ற ஆசை கொன்டவன் நான், உங்களுடைய இந்த நிகழ்வு நாம் சர்வதேச நகரமாக மாறுகின்றோம் என்பதை காட்டுகின்றது இந்த மரதன் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.
ADFEvint 1

இத்திட்டத்தை சிறப்பான முறையில் தொகுத்து விளக்கியமை நீங்கள் திறமையானவர்களை கொண்டு இயங்குகின்றீர்கள் என்பதை அறியக்கூடியதாகவுள்ளது.

இப்பிராந்தியத்தின் ஏனைய பிரதேசங்களுக்கு நாம் சலைத்தவர்கள் அல்ல என்பதை நாம் கூறிக்கொள்ளலாம்.
உங்களின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது நீங்கள் சர்வதேச தொண்டு நிறுவனமாக (INGO) பதிவு செய்து கொள்ளவேண்டியவர்கள். பாராளுமன்றத்திலும் உங்களை பதிவு செய்து கொள்ளலாம். எதிர்காலத்தில் உங்களிடம் நாங்கள் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள இருக்கின்றோம். இம் மரதன் சர்வதேச ரீதியில் வெற்றி பெற வாழ்துவதோடு பூரன ஒத்துழைப்பையும் வழங்குவேன்.

ADFEvint 2

குறித்த கல்விக்காக ஓடு எனும் தொனிப்பொருளில் ஓடுபவர்கள் தங்களின் பெயர்களை ஒன்லைன் மூலம் பதிசெய்து கொள்ள முடியும் www.adfarugambay.org
தொடர்புகளுக்கு- info@adfarugambay.org

—1st place : SLR 50,000
—2nd place: SLR 25,000
—3rd place : SLR 15,000

தகவல்-   இமாம் முஹம்மத் மற்றும் புஹாரி சப்ராஸ் (Eng)

Comments
Admin
By AdminMay 24, 2016 01:28Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
  1. Hm Mohamed Imam
    Hm Mohamed Imam May 24, 13:07

    நல்லதோர் திட்டம்

    Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

nineteen − 11 =