- பொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்!
- தொடர்ந்தும் பொத்துவில் கல்விக்கு அக்கறைப்பற்று வலயம் தடையா?
- தலமைத்துவமும் தவறான வழி காட்டுதலும்- தொடர்:- 5
- எதற்க்காக பிரதிநிதித்துவம் (MP / MPC) எமக்கு???
- பொத்துத்துவில் எதிர்நோக்கும் சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும் என்ன?
- பொத்துவில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதுவரை விமோசனமில்லை
தொடர்ந்தும் பொத்துவில் கல்விக்கு அக்கறைப்பற்று வலயம் தடையா?
Related Articles
பொத்துவில் பிரதேசம் கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் அமையப்பெற்றுள்ள பிரதேசமாகும். ஆரம்ப காலங்களில் கிழக்கு மாகாணத்தில் முதலாவது கல்வித்தரம் பெற்று உயர்ந்த இவ்வூரில் சமகால கல்விப் போக்குகள் பின்னடைவான வீழ்ச்சியினை காட்டி நிற்கின்றது. அந்தவகையில் பொத்துவில் கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களை சுட்டிக்காட்டுவதுடன் எதிர்காலங்களில் எத்தகைய மாற்றங்களை கல்வித்துறை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்பத்தியின் நோக்கு:
பொத்துவில் கல்வி அமைந்துள்ள வலயம்:
பொத்துவில் பிரதேசத்தில் மூவினங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அதே நேரத்தில் இம்மக்களின் கல்வியானது தமிழ் பாடசாலைகளின் கல்வி நிர்வாகம் திருக்கோவில் வலயத்திலும், சிங்களப்பாடசாலைகளின் கல்வி நிர்வாகம் அம்பாரை வலயத்திலும், முஸ்லிம் பாடசாலைகளின் நிர்வாகம் அக்கரைப்பற்று வலயத்திலும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பின் பின்னணிக்கு பிரதானிகளாக இனவாத, மதவாத, பிரதேசவாத அரசியல் சுயநலவாதிகள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.பொத்துவில் கல்வி நிர்வாகமானது கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்தின் கீழ் அமையப்பெற்றுள்ளது இத்தகைய நிர்வாக முறைமையினால் தொடர்ந்தும் பொத்துவில் கல்வியானது பாதிப்படைந்து செல்கின்றது. அதேவேளையில் எதிர்கால கிழக்கு மாகாணத்தின் கல்விப் பின்னடைவுக்கு பொத்துவில் கல்வி பிரதானமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பொத்துவில் கல்வியில் தீர்க்கப்படாத பிரச்சினைகள்:
1.தொடர்ச்சியான ஆசிரியர் பற்றாக்குறை
2. கட்டிடங்கள், பௌதிகவளப்பற்றாக்குறையுடன் தொடர்ந்தும் இயங்கும் பாடசாலைகள்
3. பாடங்களுக்கான உயர்தேர்ச்சி பொருந்திய ஆசிரியர்கள் இன்மை
1. தொடர்ச்சியான ஆசிரியர் பற்றாக்குறை:
தொடர்ச்சியான ஆசிரியர் பற்றாக்குறை என்பது பொத்துவில் பாடசாலைகளில் சுமார் 100 கு மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றனர். மேலும் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்கள் பொத்துவிலுக்கு நியமிக்கப்படுகின்ற அதேவேளை ஒரு சில மாதங்கள், ஒருவருடங்களின் பின்னர் இடமாற்றம் பெற்றுச் செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இந்த இடமாற்றங்களுக்குப் பிரதான பாத்திரங்களாக வலயக்கல்வி அதிகாரி அல்லது இப்பகுதியின் பிரபல அரசியல்வாதிகளினால்தான் அத்தகைய நிலை ஏற்படுகின்றது. என்பது ஆய்வுகள் ரீதியாக வெளிப்படுத்தப்படுகின்றது.
2016 இவ்வருடத்தில் சுமார் 120 மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொத்துவில் கல்விக் குழுவின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் தற்பொழுது 80 ஆசிரியர்கள் பொத்துவிலுக்கு நியமிக்கப்படுமாகவிருந்தால் உடனடியாக இப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம்.
பொத்துவிலில் கடந்த காலங்களில் ஆரம்ப நிலை வகுப்பு ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு பலவருடமாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியின் பேரில் கல்வி புகட்டி வந்தனர். ஆனால் தற்பொழுது ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் ஆரம்ப வகுப்புக்குத்தான் கற்பிக்க வேண்டும் எனும் நிலை காணப்படுவதால் இன்னும் சிரேஸ்ட இடைநிலை வகுப்புக்கள் ஆசிரியர் பற்றாக்குறையால் பின்னடைவினை நோக்கிச் செல்லக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
பொத்துவிலின் இடைநிலை மாணவர்களுக்கான கல்வியை வழங்குகின்ற பாடசாலைகளான அல் இர்பான் மகளிர் கல்லூரி, பொத்துவில் மத்திய கல்லூரி, அல்கலாம் வித்தியாலயம், அல்பஹ்ரியா வித்தியாலயம், அல் இஸ்ராக் வித்தியாலயம், அல்அக்ஸா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது.
தமிழ், வரலாறு, தகவல் தொழிநுட்பம்,புவியியல், குடியுரிமைக்கல்வி, இலக்கியநயம், செயன்முறைப்பாடங்கள் போதிக்கின்ற ஆசிரியர்கள் தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாசிரியர் பற்றாக்குறையால் தொடர்ந்தும் மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர் அக்கரைப்பற்று வலயக்கல்வி இதனை அக்கறை கொண்டு பார்க்காமைக்கு காரணம் என்ன???
-பொத்துவில் தாஜகான்-
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment