தலமைத்துவமும் தவறான வழி காட்டுதலும்- தொடர்:- 5

Admin
By AdminAugust 5, 2015 23:09

unnamed (1)இன்றைய பொத்துவில் தேர்தல் களத்தில் முப் பெரும் பிரதான கட்சிகளிடேயே அரசியல் அதிகாரத்துக்கான  போட்டி மிகவும் வீரியமான அடிப்படையில்  நிலவுகின்றது,  இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இரு கட்சிகள் எமதூருக்கான பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மற்றைய கட்சி வெளி ஊர்களுக்கான பிரதிநிதிகளை தெரிவதிலும் நேரடியாக  களத்தில் குதித்துள்ளன.

எமது பொத்துவில் ஊரானது காலா காலமாக பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்வதில் (MP & MPC) மாற்று வழி உபாயங்கலையோ அல்லது வியுகங்கலையோ வகுத்து செயற்பட்டதற்கான எந்த ஒரு அடையாளத்தையும் காணக் கூடியதாக இல்லை, இருப்பினும் மக்களிடையே வெகுவான மாற்றம் வேண்டும் என்ற தேவை உணரப்பட்டுள்ளது, இதனை கடந்த கால அரசியல் நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.

எமதூருக்கான பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்வதென்பது மிகவும் இலகுவான விடயமாக இருந்த போதிலும் கூட நாம் அந்த முயற்சியில் தோல்வி கண்டமைக்கு மிகப் பிரதான காரணங்களாக இரண்டு விடயங்களை முன் வைக்க முடியும்.

முதலாவது தோல்விக்கான காரணமாக எமதூர் அரசியல் தலமைகள்  மக்களின் ஆதரவோடு மாற்று வழி உபாயங்கள் அல்லது வியூகங்களை வகுத்து செயற்படாமை, எமதூரில் காணப் படக் கூடிய வாக்கு வங்கியை மட்டும் வைத்துக் கொண்டு பாராளுமன்றத்துக்கோ அல்லது மாகான சபைக்கோ உரிய பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்வதென்பது ஒருக்காலும் முடியாத விடயம் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் உள்ளன,இதனை நான் ஒரு மூட நம்பிக்கையாகவே பார்கின்றேன்.

பொத்துவில் வாக்குகளின் மூலம் எமக்கான பிரதி நிதித்துவத்தை (MP, MPC) கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதற்க்குரிய

காரணம் எமதூர் மக்களிடையே விழிப்புணர்வின்மை, முஸ்லிம் பெரும் பான்மை கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டுமே எமது பிரதி நிதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற மூட நம்பிக்கையாகும்.

எமதூர் பிரதிநிதிகள் முஸ்லிம் பெரும் பான்மைக் கட்சியில் போட்டி இடுவதன் மூலம் ஒருக்காலும் தனது பிரதி நிதித்துவத்தை பெற்று விட முடியாது என்பதே திண்ணம், காரணம் அங்கு நாம் பெருத்த விருப்பு வாக்குப் போட்டி என்ற சவாலில் தோற்று விடுகின்றோம், இதற்க்கு சான்றாக கடந்த காலங்களில் எமதூர் வேட்பாளர் முஸ்லிம் பெரும்பான்மை கட்சியில் போட்டி இட்டு விருப்பு வாக்கு குறைவினால் வெளியேற்றப்பட்டதனை குறிப்பிடலாம்…

மாற்று வியுகமாக எமதூர் வேட்பாளர்கள் கடந்த தேர்தல்களில் முஸ்லிம் சிறு பான்மைக் கட்சிகளில் போட்டி இட்டு இருப்பார்களேயானால் எமதூருக்கான பிரதி நிதித்துவத்தை பெற்று இருக்க முடியும் இதற்க்கு பொத்துவில் மக்களின் ஒட்டு மொத்த வாக்குகளும் இன்றி அமையாததே, இருந்த போதிலும் இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கு முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளில் இணைந்து போட்டி இட முனைந்தது எமதூர் தலமைகள் அரசியலில் முதிர்ச்சி அடைந்து வருவதனை வெளிக்கொனர்கின்றது.

முஸ்லிம் சிறுபான்மைக்  கட்சிகள் நிறுத்தி இருக்கக் கூடிய ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அவரவர் ஊரில் இருந்து குறைந்த பட்ச வாக்குகளாக 3000-5000 வாக்குகள் வரைக்கும் அளிக்கப்படுமானால், மொத்தமாக அவர்களினால் குறைந்த பட்சம் 40000 வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும் இதன் மூலம்  ஒரு ஆசனத்தையாவது இவர்களினால் சொந்தமாக்க முடியும், இருப்பினும் இந்த ஆசனம் யாருக்கு சென்றடையும் என்பது விருப்பு வாக்குகளிலேயே தங்கி உள்ளது. ஆக எமதூர் மக்கள் எமக்கான பிரதி நிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் அதற்க்கான தருணம் இதுவே.

தோல்விக்கான இரண்டாவது காரணமாக உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் அவர்களுடைய சொந்த அரசியல் இருப்பினை வலுப் பெற செய்வதற்காகவும், வெளி ஊர் அரசியல் வாதிகளால் அள்ளி வீசப் படும் சில்லறைகளுக்காகவும் தமதூருக்கான பிரதிநிதித்துவத்தை அடைமானம் வைப்பதாகும், இவர்களுக்கு ஊருக்கான பிரதிநிதித்துவத்தை பெறுவதிலும் பார்க்க அவர்களின் சுய லாபமே கண்களுக்கு தெரிகின்றது,இவ்வாறானவர்களின் ஏதிர்கால அரசியல் இருப்பு என்பது மக்களின் கைகளிலேயே தங்கி உள்ளது என்பதை இவர்கள் மறந்தே செயற்படுவது  இவர்களின் அரசியல் முதிர்ச்சியை அங்கலாய்க்கின்றது.

கடந்த காலங்களில் இவ்வாறு வெளி ஊர் அரசியல் வாதிகளுக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் வாக்கு சேகரித்து கொடுத்ததன் மூலமே பொத்துவில் பிரதேசம் தனதூருக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை விருப்பு வாக்கு குறைவு என்ற அடிப்படையில் இழக்க வேண்டி ஏற்பட்டது, இவர்கள் இந்த முறையும் வாகனங்களுக்கும், பதவிகளுக்கும், சில்லறைகளுக்கும் ஆசை கொண்டு எமதூருக்கான பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் இவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு  காட்டும் வழி மிகவும் தவறானதாகும்.

இந்த உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் தவறான வழி காட்டுதல் ஏதிர் காலத்தில் இவர்கள் மாகான சபை அல்லது பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் போது இவர்களோடு ஒட்டி உறவாடக்கூடிய, இவர்களால் தவறாக வழி நடாத்தப்படக் கூடிய இளைஞர்கள் ஏதிர் காலத்தில் வெளி ஊர் அரசியல் பிரமுகர்களுடன் இணைந்து இவர்களுக்கெதிராக வாக்குச் சேகரித்து இவர்களை தோற்க்கடிப்பதர்க்கான வியுகங்கலையே இவர்கள் இன்று வகுத்து கொடுக்கின்றனர்.

எமதூருக்கான பிரதிநிதித்துவம் இம்முறையும் குறிப்பிட்ட சில வாக்குகளின் மூலம் இழக்கப் படுமானால் அதற்க்கான முழுப் பொறுப்பும் இந்த ஊர் பற்றற்ற ஒட்டுக் குழுக்களையே சாரும், இவர்கள் வரலாறு நெடுகிலும் ஊருக்கு  இழைத்த துரோகம் இவர்களின் ஏதிர்கால அரசியல் வாழ்வை சபித்தே தீரும், இவர்கள் ஏதிர்காலத்தில் தேர்தல்களில் பங்குகொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக, பொத்துவில் ஊரின் பிரதிநிதித்துவத்தை பழி கொடுத்து அவர்களது தேசிய தலமையை திருப்திப் படுத்த முனைகின்றனர்.

இவ்வாறான இன்றைய தவறான வழி காட்டுதல் நாளை எமதூரையும், எமதூர் அரசியல் பிரமுகர்களின் அரசியல் வாழ்வையும் பாதிக்கும் என்பதனை அவர்கள் உணர்ந்து, எமதூருக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதில் அவர்களது ஆதரவை எமதூர் சார்பில் தராத போதிலும், எமக்கும் எமதூருக்கும் ஏதிராக செயற்படுவது அவர்களினது அரசியல் ஆயுளை வெகுவாக பாதிக்கும் என்பதே திண்ணம்.

மீண்டும் மீண்டும் இந்த தேசிய தலைவர்களிடம் எமதூருக்கான பிரதிநிதித்துவத்தை பிச்சை கேட்பது போல் கேட்காமல்  ஏமதூருக்கான ஆளுமை மிக்க அரசியல் பிரதிநிதித்துவத்தை மாற்று வியூகங்களை அமைப்பதன் மூலம் உரிமையோடு பெற்று, இந்த ஊரினதும், ஊர் மக்களினதும் அபிலாசைகளை நிறைவேற்ற எமதூரின் இளைஞர்களும், புத்தி ஜீவிகளும், உலமாக்களும், ஊரின் நலன் விரும்பிகளும் எமது மண்ணில் பிறந்த ஒரு வேட்பாளருக்கு அவர்களது வாக்குகளை வழங்கி தெரிவு செய்வதன் மூலமே  இந்த மூட நம்பிக்கையையும்,உள்ளூர் அரசியல் ஒட்டுக் குழுக்களையும் ஒழிக்க முடியும்.

பொத்துவில் உரிமைக்கான குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்.

இம்தியாஸ் சலீம்.

Comments
Admin
By AdminAugust 5, 2015 23:09
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

two × 2 =