பொத்துவில் மக்கள் எப்பொழுதும் தோல்வியைத் தழுவுகின்ற கட்சிக்குப் பின்னால்தான் நிற்பார்கள்.

Admin
By AdminJuly 26, 2015 22:53
சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் ஆசிரியர் ஏ.எம். அப்துல் மஜித்

சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் ஆசிரியர் ஏ.எம். அப்துல் மஜித்

பொத்துவில் மக்கள் எப்பொழுதும் தோல்வியைத் தழுவுகின்ற கட்சிக்குப் பின்னால்தான் நிற்பார்கள் இந்த முறையாவது வெல்லக்கூடிய வெற்றிலைக்கட்சிக்கு வாக்களித்து பொத்துவில் பிரதிநிதி ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவதற்கு முன்வருமாறு வேண்டுகின்றேன் என்று பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள்  எதிர்க்கட்சித்தலைவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான ஏ.எம். அப்துல் மஜித் தெரிவித்தார்.

வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற தேசிய காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (26)பொத்துவில் பிரதான வீதியில் இடம் பெற்ற பிரச்சார மேடையில் கலந்து கொண்டு உரையாற்றும்பொழுதே தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு நாம் வாக்களித்து கண்ட பயன் ஏது?

முகுது மகா விகாரையில் தூபி கட்டுவதற்கு இடம் கொடுத்தார்கள்.

சென்ற வருடம் அமைச்சர் ராஜிதவின் சகோதரனுக்கு பொத்துவிலில் காணியைப் பெற்றுக் கொடுக்குமாறு தவிசாளர் வாசித்திடம் ரவுப் ஹக்கிம் கேட்டுக்கொண்டாராம் அதனை மறுத்ததாக வாசித் என்னிடம் தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்றத்தில் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் பைசால் காசிம் உல்லைப்பிரதேச ஹோட்டல்களுக்கு பியர் லைசன்ஸ் கேட்டார். இதுதான் காங்கிரஸ் வேட்பாளர்களின் நிலையாகும்.

எனவே இம்முறை பதுர்கான் ஆசிரியருக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப முன்னிற்போம். ஏன்றார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசியத்தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை மற்றும் பொத்துவில் வேட்பானர் பதுர்கான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

-எம்.ஏ. தாஜகான்-

Comments
Admin
By AdminJuly 26, 2015 22:53
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
  1. Rafeek Cader
    Rafeek Cader August 16, 08:43

    நீங்களும் அவ்வாறுதானே

    Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

three + four =