பொத்துவிலில் பந்தாடும் மு.காங்கிரசின் அமைப்பாளர் பதவி யாருக்கு?

Admin
By AdminJuly 26, 2015 03:07Updated

PVL SLMCமு. காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னால் பொலிஸ் அதிகாரி மஜீத் விலகியதில் இருந்து இன்றுவரை முஸ்லீம் காங்கிரஸின் அமைப்பாளர் பதவி குறித்த பல சர்ச்சைகள் வந்துகொண்டே இருக்கிறது.

சில நாட்களாக குறித்த மு.கா அமைப்பாளர் பதவி பொத்துவில் பிரதேச சபையின் முன்னால் தவிசாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும்,  வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தாக என்றும் கதைகள் பரவலாக பேசு பொருளாக மாறிக்காெண்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இது தொடர்பில் பொத்துவில்.நெற் உண்மை தன்மையை ஆராயும் முகமாக தகவல்களை சேகரிக்க தொடங்கினோம்.

உண்மையில் பொத்துவில் அமைப்பாளர் பதவி இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை வழங்கடவுள்ளதாக யாருடைய பெயரையும் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுத்து மூலமாகவோ அல்லது வாய் வார்த்தையாகவோ தெரிவிக்க வில்லை என்று மு.கா முன்னாள் பிரதேச சபை உறுப்பின‌ர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

ஏன் இவ்வாறு முன்னால் தவிசாளர் வாசித்துக்கு வழங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்படுகிறது என்பது தொடர்பில் நாம் சேகரித்த தகவல்களில் பல்வேறு பட்ட உட்பூசல்களும் எமக்கு கிடைத்தன.

கடந்த நோன்புப்பெருநான் தினத்தன்று மு.காங்கிரஸ் கட்சிசார்பாக தலைவர் ஹக்கீம் தலைமையில் முன்னால் தவிசாளர் வாசீத் அவர்களின் வீட்டில் பகல் உணவு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டதை நாம் அறிந்திருந்தோம் ஆனால் அந்த பகலுணவு நிகழ்வில் மு. காங்கிரஸ் தலைவர் பங்கேற்றபோதும் பொத்துவில் பிரதேச சபையின் மு.காங்கிரஸின் உறுப்பிர்கள் 5 பேரும் குறித்த நிகழ்வுக்கு ‌செல்லாமல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

குறிப்பாக மு. காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் சம்பந்தமான முடிவுகள் அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை என்றும் அமைப்பாளர் பதவியின் இழுபறி நிலைமை தொடர்பிலும் இவர்கள் 6 பேரும் அங்கு செல்லவில்லை.

இதனை அறிந்த மு.காங்கிரசின் தலைவர் அவசரமாக அறுகம்பேயில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து குறித்த 6 உறுப்பிர்களையும் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இதன் போது பொத்துவில் அமைப்பாளர் பதவி குறித்த இழுபறி நிலமை மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டபோது அமைப்பாள‌ர் பதவி தொடர்பில் பிறகு பேசுவோம் என்று ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் வரும் பொதுத்தேர்தலில் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுமாறு ஒவ்வொரு உறுப்பினரிடமும் கேட்டுக்கொண்டார் ரவூப் ஹக்கீம் பின்னர் ஒவ்வொரு பிரதேசங்களும் ஒவ்வாரு உறுப்பினர்களுக்கு தேர்தல் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து,

பொதுத்தேர்தலுக்கான கூட்டங்களை நடாத்துவதற்கு மற்றும் தேர்தல் வேலைகளை மேற்கொள்ள தலைவராக முன்னால் பிரதேச சபையின் தவிசாளர் ஆசிரியர் மர்சூக் அவர்களை தலைவர் ஹக்கீம் நியமித்துள்ளார் அவர் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்க அந்த ‌தேர்தல் பொறுப்பாளராக வாசீத் அவர்களை தலைவராகவும் மர்சூக் ஆரியர் மற்றும் தாஜூதீன் ஆரியர்  இருவரையும் ஆலோசகராக  நியமித்தார் ஹக்கீம்.

தாஜூதீன் ஆசிரியர் தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பான வேற்பாளர்களுக்கு வேலைசெய்ய விருப்பம் தெரிவித்ததுடன் ஆலோசகராக இருக்க மறுத்துவிட்டார்.

அதனை தொடர்ந்து ரவூப் ஹக்கீம் கூட்டத்தை நிறைவு செய்து விட்டு சென்றுவிட்டார்.

மு. காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளர் பதவி உத்தியோக பூர்வமாக வழங்கப்படாத நிலையில் தான்தோன்றித்தனமாக சிலர் பொய்யான தவல்களை வழங்கி மு.காங்கிரஸ் கட்சியினை பொத்துவிலில் பிளவுபடுத்த கட்சியில் புதிதாக சேர்ந்தவர்கள் முயற்சிப்பதாக பொத்துவில் மு.காங்கிரஸ் போராளி ஒருவர் தெரிவித்தார்.

ஆக மு.காங்கிரசின் அமைப்பாளர் பதவி வழங்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா இல்லையா என்று யோசிக்கத்தோன்றுகின்ற நிலைமையிலும், முன்னால் தவிசாளர் வாசீத்தி்ன் வீட்டில் நடத்தப்பட்ட பகலுணவு நிகழ்வில் மு. காங்கிரசின் தலைவர் கலந்து கொண்ட போதிலும் உறுப்பினர் புறக்கணித்தனர்.

இப்படி இருக்க அவர் வீட்டில் நடந்த நிகழ்வில் என்ன இலாபத்திற்காக அமைப்பாளர் பதவி வாசீத் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரப்பப்படுகிறது???

இனி உங்கள் சிந்தனைக்கு.

பிரதம ஆசிரியர் பொத்துவில் நெற்.

Comments
Admin
By AdminJuly 26, 2015 03:07Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

10 − six =