எதற்க்காக பிரதிநிதித்துவம் (MP / MPC) எமக்கு???

Admin
By AdminJuly 22, 2015 12:37

ARTICLEவரையறை செய்வதற்கு தனக்கென்று ஒரு எல்லை இல்லாமலும், அரசியலில் அனாதையாகவும், அபிவிருத்தியில் பின்தள்ளியும், பொருளாதாரத்தில் மந்தநிலையிலும், கல்வியில் களங்கமாகவும், சுகாதாரத்தில் சுருங்கியும், விவசாயத்தில் வறண்டும் காணப்படக் கூடிய எமது பொத்துவில் ஊருக்கு எதற்கு பிரதிநிதித்துவம்??

நானிலங்களையும் தன்னகத்தே கொண்டு பலஸ்தீனிய பூமியை போன்று நாலாபுறமும் நாளுக்கு நாள் சுருங்கி வரக்கூடிய பொத்துவில் ஊரின் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு பிரதேச சபையிலும், மாகான சபையிலும் பிரேரணைகளை கொண்டு வந்து நிறைவேற்றி, பாராளுமன்றத்திலும் பொத்துவிலின் குரல் ஒலிப்பதற்கு வேண்டாமா எமதூருக்கு பிரதிநிதித்துவம்??

பொத்துவிலுக்கு தனியான கல்விக் கோட்டதினை கொண்டுவந்து பொத்துவில் மத்திய கல்லூரி, அல் இர்பான் மகளிர் பாடசாலை, மெதடிஸ்ட் மிசன் தமிழ் பாடசாலை போன்றவற்றை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தி, பாடசாலைகளில் காணப்படக் கூடிய ஆசிரியர் பற்றாக்குறைகளை நீக்கி எமதூரின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த கல்வியினை வழங்குவதற்கு வேண்டாமா எமதூருக்கு பிரதிநிதித்துவம்?

எமக்கு சொந்தமான எமது மூதாதயர்களினால் கைவிடப் பட்ட ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகளையும், மேய்ச்சல் தரைகளையும் விடுவித்து அவற்றில் விவசாயம் செய்யவும், கால்நடைகளை வளர்க்கவும், அடிப்படை ஜீவனோபாய கடல் மற்றும் காட்டுத் தொழில்களில் காணப்படக்கூடிய கட்டுப்பாடுகளில் தளர்வுகளை கொண்டுவருவதன் மூலம் எமதூரின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தவும் வறுமையினை ஒழிக்கவும் வேண்டாமா எமதூருக்கு பிரதிநிதித்துவம்?

பொத்துவில் ஏழை விவசாயிகளினால் அறுவடை செய்யப்படும் நெற்கலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்வதற்கான பொறிமுறை ஒன்றை அணைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதன் மூலம் அவர்கள் நட்டமடைவதனை தடுப்பதற்கு வேண்டாமா எமதூருக்கு பிரதிநிதித்துவம்??

பொத்துவில் வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவர்கள், தாதியர்கள், சிற்றுாழியர்கள், மருந்துகள், ஏனைய மருத்துவ உபகரணங்களை கிரமமான முறையில் பெற்றுக் கொள்வதன் மூலம் அவதியுறும் ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதற்கு வேண்டாமா எமதூருக்கு பிரதிநிதித்துவம்?

பொத்துவிலுக்கென்று ஒரு பொது மைதானத்தினை ஏற்படுத்துவதன் மூலம் அங்கும் இங்கும் விளையாடுவதற்கு இடமின்றி அவதியுறும் இளைஞர்களின் தேவையினை கருத்தில் கொண்டு ஒரு பொது மைதானத்தினை உருவாக்குவதற்கும், இளைஞர் யுவதிகள் அமைச்சின் கீழ் அவர்களுக்கான வழி காட்டுதல்களையும், பயிற்சிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு வேண்டாமா எமதூருக்கு பிரதிநிதித்துவம்?

பொத்துவிலுக்கென்று தனியான ஒரு போக்குவரத்து டிப்போவை அமைத்து தேவைக்கேற்ப பஸ் வண்டிகளைப் பெற்று பொதுமக்களின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு வேண்டாமா எமதூருக்கு பிரதிநிதித்துவம்?

பொத்துவில் ஊருக்குள் காலம் காலமாக எமது மக்களால் வசித்து வரக்கூடிய நிலங்களுக்கான உறுதிப் பத்திரங்களைப் பெற்று அந்தக் காணிகளை சட்ட ரீதியாக அவர்களது உடமையாக்கிஅவர்களுக்கான அடிப்படை வசதிகளான பாதை அமைப்பு, நீர் வழங்கல் மற்றும் வடிகான் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் அம்மக்களின் வாழ்வில் ஒரு முன்னேற்றத்தினை கொண்டுவர வேண்டாமா எமதூருக்கு பிரதிநிதித்துவம்?

அரச தொழில் வாய்ப்புக்கள் அதன் பிரதிநிதிகளின் ஊடாக வழங்கப்படும் போது ஏமாதூர் இளைஞர் யுவதிகளுக்கும் நிருவாக ஊழியர்கள் நியமனத்தில் நியாயமான பங்கீட்டினை பெற்றுக் கொடுப்பதற்கு வேண்டாமா எமதூருக்கு பிரதிநிதித்துவம்?

ஏமாதூர் மக்கள் முஸ்லிங்களின் தேசிய அரசியலில் மிகவும் திடமான நம்பிக்கை உடையவர்களாக ஒன்றரை தசாப்த காலங்களாக வாக்களித்தும், எமக்கான பிரதிநிதித்துவம் இதுவரை வழங்கப் படவில்லை என்பது எந்த அளவிற்கு நாம் தேசிய அரசியலில் பகடைக்காய்களாக பயன் படுத்தப்பட்டு வந்திருக்கின்றோம் என்பதனை சான்று பகர்கின்றது இந்த தேசிய கட்சிகளின் பகட்டு நாடகம் தொடர்ந்தும் அரங்கேற்றப் படுவதனை எம்மால் ஜீரணிக்க முடியாது இதுவே வெவ்வேறு முஸ்லிம் கட்சிகளின் தோற்றத்திற்கும் அவற்றின் பொத்துவில் வருகைக்கும் காரணங்களாகும்.

பொத்துவில் ஊருக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதில் எமதூரில் காணப்படக் கூடிய புத்தி ஜீவிகளும், கல்விமான்களும், மதத் தலைவர்களும், இளைஞர்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டி உள்ளது.
அரசியலில் ஈடுபடக்கூடிய தனி நபர்களை தரம் பிரித்து அறிந்து சமூக உணர்வுடன் செயலாற்றக்கூடிய, தனி நபர் ஒழுக்கம் உடைய பொத்துவில் ஊருக்கான அடையாளமாக திகழக் கூடிய தலைவர் யார் என்பதனை தரம் கண்டு தேசிய கட்சிகளுடன் பேரம் பேசி மாகான சபை உறுப்புரிமை மற்றும் பாராளுமன்ற உருப்புரிமையினை தேசியப் பட்டியலூடாகவேனும் உறுதிப் படுத்தி எழுத்து மூலம் தரக் கூடிய கட்சிக்கே எமது வாக்குகளை சிதறாமல் நாம் வழங்க வேண்டும்.
என்பதே நாம் பொத்துவில் மக்களினது ஒருமித்த கருத்தாகும்…..

எழுதியவர்- இம்தியாஸ் சலீம்.

தொடரும்.

Comments
Admin
By AdminJuly 22, 2015 12:37
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

4 Comments

 1. Deen Nifras
  Deen Nifras July 22, 08:50

  Grade…….

  Reply to this comment
 2. Agj Roshan
  Agj Roshan July 23, 08:38

  Good Analysis

  Reply to this comment
 3. Ariff Siraj
  Ariff Siraj July 23, 18:37

  இவ்வாறு முற் போக்கு சிந்தனை உல்ல இளைஞர்களே எமதூருக்கு தலமைகளாக வேண்டும்..

  Reply to this comment
 4. Fawzar Keo
  Fawzar Keo July 25, 10:00

  தொடர்ந்தும் எழுத எனது நல் வாழ்த்துகள்.

  Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

18 + 20 =