கொஞ்சம் யோசியுங்கள், SSP மஜீதிற்கு உருக்கமான கடிதம்

Admin
By AdminJuly 14, 2015 15:35Updated

Letter to sspபொத்துவிலுக்கு அறுதியும் இறுதியுமாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது  அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ள நாம் உங்களிடம் வினயமாய் வேண்டிக்கொள்வதெல்லாம் உங்களிடம் நீண்டநாளாக குடி கொண்டிருக்கும் “ நான் என்னும் அகங்காரம் , தன்மானம்,   கௌரவம், தாழ்வுச்சிக்கல்,   சோம்பல் , என்பவற்றை முதலில் களைந்தெரியவும்.

ஓய்வெடுக்க நேரம் போதாது இருப்பது இன்னும் ஒரு மாதம் மட்டுமே , பொத்துவில் இளைஞ்ஞர்கள் தலைமை ஒன்றுக்காக விரக்தியோடும் மட்டில்லா உணர்வு மிகுந்த சக்தியோடும் அலைந்து திரிகின்றார்கள் .

அவர்களை அரவணைத்து அவர்களிடம் உள்ள சக்தியை உங்கள் அரசியல் பயனதிற்காக பயன்படுத்துங்கள்.

பழைய தபால் காரியாலய கட்டிடத்தில் சாய்மணை கதிரையில் சாய்ந்து கிடப்பதை விட்டு வீருகொண்டெலுந்து பொத்துவிலின் மூளை முடுக்கெல்லாம் சென்று நமது மக்களை சந்திதித்து தங்களுக்கு ஏற்பட்ட குழி பரிப்புக்களையும் ,
பழி வாங்குதல்களையும் மக்களிடம் ஒப்பிவியுங்கள்.

பொத்துவில் மக்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் அவர்கள் உங்களை பொருந்தி கொள்வார்கள் , கல்வி மான்கள் ,உலமாக்கள் , படித்தவர்கள் , RDS அமைப்புகளின் தலைவர்கள் , சங்கத் தலைவர்கள் இப்படி ஒருவர் விடாமல் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை கேளுங்கள்.

தேர்தலுக்கு நிதி இல்லாவிடில் உண்மை நிலவரத்தை அவர்களிடம் ஒப்புவியுங்கள் , ஊருக்காக செலவழிக்க அத்தனை பேரும் தயாராக இருக்கிறார்கள்.  நிதி எவ்வாறு பெறவேண்டும் என்று உங்களை விட அவர்கள் அரிந்திருக்கலாம்.

பொத்துவில் அரசியல் மீது விரக்தி மனப்பான்மையில் இருக்கும் இளைஞர்களிடம் உங்களின் தொலைபேசி இலக்கத்தை கொடுக்காமல் அவர்களின் இலக்கத்தை வாங்கி எந்நேரமும் தொடர்பு கொண்டு தேர்தல் பர பரப்பில் இருக்கப்பாருங்கள்

மறுபடியும் கெஞ்சி கேட்டு கொள்கின்றோம் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நான் என்னும் அகங்காரத்தை கைவிட்டு இத்தேர்தலை எதிர் நோக்கவும்.

எழுதியவர் – எம் பி ஜூனைதீன் 

தமிழில் மொழிமாற்றம்- றியாஸ் சரீப்.

 

Comments
Admin
By AdminJuly 14, 2015 15:35Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

4 Comments

  1. Pottuvil Munsi
    Pottuvil Munsi July 14, 10:31

    மறைந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.பீ.எ.அஸீஸ் இற்கு பின்னர் எமது பொத்துவில் மண்ணானது பாராளுமன்ற பிரதிநிதித்துவமற்று அரசியல் அநாதையாக காணப்படுவது நாம் எல்லோரும் அறிந்த விடயம்தான்.இந்த நீண்டகால குறைபாட்டினை நிவர்த்தி செய்ய எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியிருக்கின்றது.அதுதான் நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலாகும்.எனவே எமது ஊர்மக்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஊர்நலனை அடிப்படையாகக் கொண்டு வாக்குகளை அளிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்.

    Reply to this comment
  2. Mohamed Thasim
    Mohamed Thasim July 14, 21:15

    Nallathoru seithi. Ithanai uro

    Reply to this comment
  3. Alameenubeen Deen
    Alameenubeen Deen July 14, 23:07

    என் மதிப்புக்கும் கண்ணியத்துக்கும் உரிய
    என் உயிரான பொத்துவிலை சேர்ந்த அனைத்து மக்களே
    இத்தேர்தல் நம்முடைய தலையெழுத்தை மாற்றக்கூடிய மிக முக்கியமான தேர்தலாக இருப்பதால்
    தயவுசெய்து நன்கு சிந்தித்து செயல்பட்டு நம் எதிர்காலத்தை
    வழமுரச்செய்வோமாக
    இவ் அரிய சந்தர்ப்பத்தை கை நழுவிவிடாமல் சிந்தித்து செயல்படுவோமாக

    Reply to this comment
  4. Nowshad Jamaldeen Jamaldeen
    Nowshad Jamaldeen Jamaldeen July 15, 08:52

    Kalmunai 2 candidate 'Ninthavoor 2 candidate but other village people vote for them but never get gain therefore vote for pottuvil candidate n win our seat.via pea cock simple

    Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

eleven − six =