பொத்துவில் யானை மயிலாகிய மர்மம் என்ன? ஏமாற்றுகிறார் ஹக்கீம்

Admin
By AdminJuly 12, 2015 21:54Updated

பொத்துவில் யானை மயிலாகிய மர்மம் என்ன? ஏமாற்றுகிறார் ஹக்கீம்

ssp1பொத்துவிலின் சிரேஸ்ட அரசியல் பிதாமகன் முன்னாள் ரகர் விளையாட்டுக்கழகத்தின் சிறந்த வீரன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் மயில் சின்னத்தை கொண்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசில் அம்பாரை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதை செய்திகளின் மூலமாக அறிந்த பொழுது யானைமயிலாகிய மர்மம் என்ன என்பதைப் பற்றிய தேடுதலில் குதித்த பொழுது வெளிவந்ததுதான்  இந்தக்கட்டுரை என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றேன்.

பொத்துவிலில்; மாத்திரமன்றி, கரையோர மாவட்டத்தின் முஸ்லிம்களின் பிரதிநிதியாகவும், ஐக்கிய தேசிய கட்சி எனும் கிளட்டு யானையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில்அறிமுகப்படுத்தியவரும்,அப்துல் மஜித் ஆவார் என்பதை அப்துல் மஜிதின் ஆதரவாளர்கள் அறிந்தவிடயம்.

ஜனாதிபதி மைத்திரியை ஆதரித்து ஐக்கிய தேசிய கட்சி சார்பாக பொத்துவிலி;ல் இடம் பெற்ற மாபெரும் பிரச்சார மேடையை அமைத்து மேடையில் கடைசி வரை காத்திருந்தும் பேசமுடியாமல் எஸ்.எஸ்.பியை அன்று தடுத்த சில குள்ளநரி அரசியல்வாதிகளின் செயற்பாட்டை வைத்தே அப்துல் மஜிதின் அரசியல் வளர்ச்சியை  ஜீரணிக்க முடியாத சில சக்திகள் பொத்துவிலிலும் கிழக்கிலும் வலம் வருகிறார்கள் என்பதை அறிந்துகொண்டோம்.

சரி இனி அப்துல் மஜித் அவர்கள் யானையை நம்பி தான் வெம்பி  எம்பியாகலாம் என நினைத்தாரோ? என்னவோ யானை சதி செய்து விட்டதாம் யானை சதி செய்யவில்லை யானைப்பாகன் திசை திரும்பி விட்டான்.

யானைப்பாகனை திசை திருப்பிய சதிகாரர்கள் யார்?

 • மாண்பு மிகு முன்னாள் நீர்ப்பாசன அமைச்சரும்,ஐக்கிய தேசிய கட்சியின் கலாகெதர தொகுதி அமைப்பாளருமான அல்ஹாஜ் ரவுப்ஹக்கிம்
 • மற்றவர் அம்பாரை மாவட்டத்தில் சிங்கள மக்கள் மத்தியில் துவேசத்தை விற்றவர் தயாகமகே அவர்கள்

ரவுப் ஹக்கிம் பொத்துவில் பிரதேசத்தை மரம் எனும் கட்சியை வைத்துக் கொண்டு பொத்துவில் மக்களை கோடரிக்காம்புகளாக கடந்த காலங்களில் நடாத்தி வந்துள்ளார். அமைச்சர் ரவுப் ஹக்கிம் நல்லவர் ஆனால் பொத்துவில் விடயத்தில் பொடுபோக்குத்தனம் கொண்டு மேடைகளில் இழித்துரைத்து நிதர்சனமாக வாக்குகளை சூறையாடிச் செல்வார்  என்பது வரலாற்று உண்மைப்பாடமாகும்.

அந்த வகையில்தான் எஸ்.எஸ்பி அப்துல் மஜித் அவர்களை கடந்த மாகாண சபைத்தேர்தலில் திட்டமிட்டு பொத்துவில் ஏஜென்ட்வாதிகளை வைத்து தோற்கடிக்கச் செய்தார்.

அதற்கு காரணம் கட்சி எனும் போர்வையில் தலைவர் ஹக்கிம் எடுக்கின்ற மடத்தனமான முடிவுகளுக்கு பொத்துவில் அப்துல் மஜித் கட்டுப்படாமல் இருந்தமைதான்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் விடயத்தில் சரியான தீர்வை மக்களுக்கு பெற்றுக் கொடுக்காது என்பதனால் உடனடியாக ஐக்கிய தேசிய கட்சியில் எஸ்.எஸ்.பி அப்துல் மஜித் இணைந்து கொண்டார், இணைந்தார்.

ரணிலுடன் பிணைந்தார். பிறகு கொம்பன் யானையாய் மாறினார்.

பிறகு நடந்தது என்ன? ரவுப்ஹக்கிம் எஸ்.எஸ்பி. அப்துல் மஜிதை வீழ்த்துவதில் குறியாய் நின்றார்.

எஸ்.எஸ்.பி அப்துல் மஜிதை வீழ்த்திய சம்பவங்கள்

 • கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது எஸ்.எஸ்.பி அப்துல் மஜித் அவர்களினால் ஐக்கிய தேசிய கட்சிசார்பாய் போடப்பட்ட பிரச்சார மேடையில் ரவுப் ஹக்கிம் கொழும்பில் இருந்து வந்து இணைந்துகொண்டார். அன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி அவர்களை ஆதரிப்பதாக மேடையேறிய ஹக்கிம் எஸ்.எஸ்.பி. அப்துல் மஜித் அவர்களை பிரச்சார மேடையில் பேசாமல் தடுத்தார். 

இச்செயற்பாட்டை கண்ணுற்ற அன்றைய பொத்துவில் மக்கள் அமைதி காத்தார்கள்.

 • 100 நாள் திட்டத்தில் கிழக்கு மாகாண சபையினை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியயதும்கிழக்கு மாகாண ஆளுநராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி அப்துல் மஜிதைபிரேரித்த பொழுது அதனை தடுத்து பெரும்பான்மை சமூகத்திடம் ஒப்படைத்தார் ரவுப்ஹக்கிம் அவர்கள்.

 • இம்முறை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கேட்பதாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது.  அந்த ஒப்பந்தத்தில் பொத்துவில் எஸ்.எஸ்.பி அப்துல் மஜித் தேர்தலில் கேட்கக்கூடாது என்பதில் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்து செயற்பட்டார் ரவுப்ஹக்கிம் அவர்கள்.

 • மற்றவர் அம்பாரை மாவட்டத்தில் சிங்கள மக்கள் மத்தியில் துவேசத்தை விற்றவர் தயாகமகே அவர்கள் தயாகமகே எஸ்.எஸ்.பி அப்துல் மஜித் யானையில் வந்த பொழுதே தனது செல்வாக்கை இழந்துவிட்டார்.

 • பூனைக்கட்சியாவது அமைத்து புறப்படுவோமா? என்று ஏங்கித்தவித்தவர் அதற்கு காரணம் கரையோரப்பகுதியில் தயாவின் கென்ஸ்ரக்சன் எடுபடாமல் விடுமோ? எனும் ஏக்கம்தான்.

இச்சந்தர்பத்தில் பொதுத்தேர்தலில் அப்துல் மஜிதை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்பதில் தயாகமகே உறுதியாக இருந்தார். கீரியும் பாம்புமாய் படமெடுத்த ரவுப்ஹக்கிம் அவர்களும், தயாகமகே அவர்களும்எஸ்.எஸ்.பியை பொதுத்தேர்தலில் நிறுத்தமால் தடுத்த மாயம் வெளிப்பட்டுவிட்டது.

இதனால் பொதுத்தேர்தலில் அப்துல் மஜிதுக்கு ரணில் வைத்தார் ஆப்பு.

இச்சந்தர்பத்தில்தான் மயில் ஆதரவு தருவதாகவும், பொத்துவில் பிரதேசத்தின் அரசியலில் தோகை விரித்தாடுவதற்காகவும் அப்துல் மஜிதை ரிசாத் பதியதீன் அவர்கள் வேட்பாளராககளமிறக்கியுள்ளார்.

பொத்துவில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள்

ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு ஊருக்கான எம்பியை பெற வேண்டும் என போட்டி போட்டு முயற்சித்துக் கொண்டிருந்த பொழுதும் பொத்துவில் ஊரின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள், ஏஜென்டுகள் தலைவர் ஹக்கிமிடம் கேட்டவைகள்:

 • பொத்துவிலில் அமைக்கும் கட்சியின் மத்திய குழுவில் தலைவர் பதவியும்.

 • பொத்துவில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் பதவியும்.

 •  பொதுத்தேர்தல் மேடை என்ட தலைமையில் போடனும் எனும் கோசமும்

 • அமைச்சரானால் எனக்கும் ஒரு வாகனம் தரணும்

 •  அடுத்த பிரதேச சபையில் வேட்பாளர் நியமனம்

மேற்சொன்னவைகள்தான் பொத்துவிலின் முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் தலைவரிடம்கேட்டவைகள்!

தலைவர் ஹக்கிம் அவர்களே!

பொத்துவில் விடயத்தில் அப்துல் மஜித் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை கட்சியை விட்டு விலகி ஒரு வருடத்திற்கு மேலாகின்றது நீங்கள் அதற்குள் கட்சியின் நிர்வாகப் பொறுப்பை யாருக்கு வழங்கினீர்கள்?
 •  சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளர் யார்??
 • இக்கட்சிக்கு பொத்துவிலில் மத்திய குழு உண்டா?
 •  கட்சிக்கான பொத்துவில் அலுவலகம் உண்டா? இல்லை ,இல்லை.

காரணம் இதனை கேட்பவர்கள் இங்கு யாரும் இல்லையென்றுதானே?

கட்டுரையாளர் : ஊடகவியலாளர் எம்.ஏ. தாஜகான்

Comments
Admin
By AdminJuly 12, 2015 21:54Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

15 Comments

 1. Nanmakkal Manram Pottuvilan
  Nanmakkal Manram Pottuvilan July 12, 18:06

  Really this is the true situation

  Reply to this comment
 2. Nanmakkal Manram Pottuvilan
  Nanmakkal Manram Pottuvilan July 12, 18:06

  Really this is the true situation

  Reply to this comment
 3. Nanmakkal Manram Pottuvilan
  Nanmakkal Manram Pottuvilan July 12, 18:06

  Really this is the true situation

  Reply to this comment
 4. Alameenubeen Deen
  Alameenubeen Deen July 12, 19:46

  இந்த ஹக்கீம் யாரு?
  இவரு பொத்துவிலுக்காக என்னதான் செய்தார்???
  பொத்துவிலுடைய ஆளுநர் பதவியை பரித்தது போதமல்
  வேற்பாலர் பதவியையும் பறிக்க சதித்திட்டம் தீட்டுகிறார?

  Reply to this comment
 5. Alameenubeen Deen
  Alameenubeen Deen July 12, 19:46

  இந்த ஹக்கீம் யாரு?
  இவரு பொத்துவிலுக்காக என்னதான் செய்தார்???
  பொத்துவிலுடைய ஆளுநர் பதவியை பரித்தது போதமல்
  வேற்பாலர் பதவியையும் பறிக்க சதித்திட்டம் தீட்டுகிறார?

  Reply to this comment
 6. Alameenubeen Deen
  Alameenubeen Deen July 12, 19:46

  இந்த ஹக்கீம் யாரு?
  இவரு பொத்துவிலுக்காக என்னதான் செய்தார்???
  பொத்துவிலுடைய ஆளுநர் பதவியை பரித்தது போதமல்
  வேற்பாலர் பதவியையும் பறிக்க சதித்திட்டம் தீட்டுகிறார?

  Reply to this comment
 7. Aneed Boss
  Aneed Boss July 13, 03:29

  awentakutijrra kalataliwen majeed mutukalumpu illatha passaoonti paampu ewarkal eawanum wantaam ematuurkku

  Reply to this comment
 8. Aneed Boss
  Aneed Boss July 13, 03:29

  awentakutijrra kalataliwen majeed mutukalumpu illatha passaoonti paampu ewarkal eawanum wantaam ematuurkku

  Reply to this comment
 9. Aneed Boss
  Aneed Boss July 13, 03:29

  awentakutijrra kalataliwen majeed mutukalumpu illatha passaoonti paampu ewarkal eawanum wantaam ematuurkku

  Reply to this comment
 10. Mohamed Hussain Abdul Wahab
  Mohamed Hussain Abdul Wahab July 13, 05:23

  எவரோ எந்தக் கட்சியோ பொத்துவில் பிரதிநிதித்துவத்திற்காக எல்லோரும் பாடுபட்டாக வேண்டும்

  Reply to this comment
 11. Mohamed Hussain Abdul Wahab
  Mohamed Hussain Abdul Wahab July 13, 05:23

  எவரோ எந்தக் கட்சியோ பொத்துவில் பிரதிநிதித்துவத்திற்காக எல்லோரும் பாடுபட்டாக வேண்டும்

  Reply to this comment
 12. Mohamed Hussain Abdul Wahab
  Mohamed Hussain Abdul Wahab July 13, 05:23

  எவரோ எந்தக் கட்சியோ பொத்துவில் பிரதிநிதித்துவத்திற்காக எல்லோரும் பாடுபட்டாக வேண்டும்

  Reply to this comment
 13. Sifath Mim
  Sifath Mim July 14, 06:57

  this true pottuvil uk ippayavathu oru unmayan thalivari thereepu seyvam

  Reply to this comment
 14. Sifath Mim
  Sifath Mim July 14, 06:57

  this true pottuvil uk ippayavathu oru unmayan thalivari thereepu seyvam

  Reply to this comment
 15. Sifath Mim
  Sifath Mim July 14, 06:57

  this true pottuvil uk ippayavathu oru unmayan thalivari thereepu seyvam

  Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

15 − 13 =