பொத்துவில் மக்கள் ஏன் ஹக்கீம் ,றிஸாத்,அதாவுல்லாவிற்கு வாக்களிக்கவேண்டும் ?

Admin
By AdminJuly 1, 2015 14:57Updated

spotlightpic1

அக்கரைப்பற்று மக்களைப் பொருத்தவரையில் அவர்கள் அதாவுல்லாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது என்னைப் பொருத்தமட்டில் அவர்களது தலையாய கடமை.

ஏனெனில், அரசியல் மூலம் ஏதோ ஒரு விதத்தில், அதுவும் அதாவுல்லாவின் மூலம் இலாபம் பெற்றவர்கள் அவர்கள்.

அது அபிவிருத்தியாக இருக்கட்டும், தொழில்வாய்ப்பாக இருக்கட்டும், சமூக மேம்பாடாக இருக்கட்டும் இவ்வாறு அதாவுல்லாவினால் அக்கரைப்பற்று பெற்ற சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தேசிய காங்ரஸ் என்ற கட்சி அமைப்பதற்கு முதல் நான் கண்ட அக்கரைப்பற்று வேறு இப்போது இருக்கின்ற அக்கரைப்பற்று வேறு ஆனால், அதற்காகவேண்டி பொத்துவில் மக்களோ கல்முனை மருதமுனை மக்களோ அதாவுல்லாவிற்கு வாக்கு போட வேண்டும் என்று அதாவுல்லாவோ அக்கரைப்பற்று மக்களோ நினைப்பது மகா தவறு.

அக்கரைப்பற்று மக்கள் அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாக அவருக்கு வாக்கு போடவேண்டியது அவர்களது கடமை. எங்கேயோ வன்னியில் கட்சி தொடங்கிய ரிசாட் பதுயுதீனால் நாடு பூராகவும் கட்சி அலுவலகம் திறக்க முடியுமாக இருந்தால், ஏன் அதாவுல்லாவால் குறைந்தது பக்கத்து ஊர்களில் ஆவது கட்சி அலுவலகம் திறக்க முடியாமல் போனது,
அது அவரின் பிழையா!!!???
அல்லது அவர் செய்த
அரசியலின் பிழையா….??

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, அவர் முதல் தடவையாக பாராளுமன்றம் செல்வதற்கு பொத்துவில் மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் உறுதுணையாக இருந்தது. (Ex MP. MBA Azeez ஊடாக)

ஆனால், அதற்காக வேண்டி அவர் அந்த ஊர் மக்களுக்கு செய்ததுதான் என்ன? சிலரை பழிவாங்குவதாக நினைத்து அந்த ஊர் மக்களையே பழிவாங்கினார்.

பொத்துவில் மக்களின் மனங்களில் மறக்காமல் இருக்கும் இவரின் சேவைகளில் சில,
# இறத்தல் படுகொலையின் போது ஊரே கொதித்து நின்றது, அந்த நேரம் இவர் நேத்ரா TV இல் பேட்டி கொடுத்தது.

# கிறிஸ் மேன் பிரச்சினையின் போது இவர் வீசிய வார்த்தைகள்.

#ஊருக்கு மத்தியில் நான் மேடை போட்டு கூட்டம் நடத்திக்காட்டுவேன் என்று சிலருடன் கொடுத்த அடாவடி வாக்குறுதிகளுக்கமைய பள்ளிவாசலுக்கு அருகாமையில் கச்சேரி நடத்தியமை.

#சில விசயங்கள் வெளிப்படையான பொய் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை, உண்மை போல் மேடையில் தெளிவாக பேசுதல். (இடை இடையே மாஷa அல்லாஹ், பாரக்கல்லாஹ்.)

#மர்ஹூம் எம் எச் எம் அஸ்ரப் ஆல் நிதி ஒதுக்கப்பட்டு , ஹக்கீமால் கட்டப்பட்ட கலாச்சார மண்டபத்திற்கு, பூசி பெயின்ட் பன்னிவிட்டு , ஊரே எதிர்த்து நின்ற வேலை தன்னுடைய பெயரை அதில் பொரித்தமை.
(பின்னர் அந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது.)

இன்னும் பல இதற்கிடை இடையே சில அவரது கையாற்களுக்கான வேலைவாய்ப்புக்கள்
வெளிநாட்டு உதவியுடனான நீர் வழங்கல்.
இது தவிர,
அனைத்து முஸ்லிம் மக்களும் மைத்திரியை ஆதரித்த போது, தான் மஹிந்தவுக்கு கூசா பிடித்தமை.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அவருக்கு பொத்துவில் மக்கள் வாக்கு போட வேண்டும் என்று அவர் நினைப்பது சரியா ,,!!?? தவறா…!!?? எனக்கே புரியவில்லை.

இந்த முறை இறைவனின் நாட்டமிருந்தால் அவர் பாராளுமன்றம் செல்வார், அதைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லை ஆனால், பொத்துவிலைப் பொருத்தவரை ஹக்கீமாலோ சரி, அதாவுல்லாவாலோ சரி, மற்றும் ஹரீஸ், பைசல் காசிம் ,
ஹசன் அலியாலோ சரி  ஏமாற்றப் பட்ட ஊர் பொத்துவில் என்று சொல்லுவதில் எந்த தவறும் இல்லை.

இந்த தடவை பொத்துவில் மக்கள் யாரால் எப்படி எமாற்றப்படுவார்களோ!!!

By. Hamsath

Comments
Admin
By AdminJuly 1, 2015 14:57Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
 1. Mohamed Naleer
  Mohamed Naleer July 1, 11:14

  Hamzath.
  pirathesa sapai kaddidam , congreet veethikal, school development , meenavarkalukkaana uthavikal ivaikal yaarin muyartchchiyaal vanthathu tthoazhare.ivaikalin owworu nikalvukkum unkalathu sapai thavisaalar periya saddchiyallawa. Nanri msrakkappidaa brother.

  Reply to this comment
 2. Mohamed Naleer
  Mohamed Naleer July 1, 11:14

  Hamzath.
  pirathesa sapai kaddidam , congreet veethikal, school development , meenavarkalukkaana uthavikal ivaikal yaarin muyartchchiyaal vanthathu tthoazhare.ivaikalin owworu nikalvukkum unkalathu sapai thavisaalar periya saddchiyallawa. Nanri msrakkappidaa brother.

  Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

15 − ten =