பொத்துத்துவில் எதிர்நோக்கும் சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும் என்ன?

Admin
By AdminJune 7, 2015 12:53

பொத்துவில் வரலாறு நெடுகிலும் காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர் நோக்கியே வந்திருக்கிறது. இந்த பிரச்சினைகளின் வீரியமும் வடிவங்களும் மாறுபட்டவை. ஆயினும் இந்த பிரச்சினைகளை பொத்துவில் சமுகம் கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப முகம் கொடுத்து சமாளித்தே வந்துள்ளது.

கல்வி

வணிகமயமாக்கப்பட்ட பாடசாலை கல்வி, ஆசிரியர் பற்றாக்குறை, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இண்மை, ஆசிரியர்கள் இடமாற்றம், வளப்பற்றாக்குறை, தனியார் வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்வதனை தடை செய்தல் போன்ற காரணங்களால் மாணவர்களின் எதிர் காலம், கணவு, ஆசை, இலட்சியம் அத்தனையும் அழிந்து போக வழி வகுக்கின்றது,

பொருளாதாரம்

பொத்துவில் விவசாயிகளின் 1000 ஏக்கர்களுக்கும் மேலான பூர்வீக காணிகள் 25 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்ய முடியாமல் முடக்கப்பட்டுள்ளமை, விவசாயம் செய்வதற்கு போதிய நீர் வசதியிண்மை, பொத்துவிலின் எல்லை நிர்ணயம் இதுவரை கிடப்பில் இருப்பதனால் எமது ஊருக்கு சொந்தமான வயல் நிலங்களும், மேய்ச்சல் தரைகளும் அயல் ஊர்வாசிகளால் அத்து மீறி ஆக்கிரமிக்கப்படுகின்றமை, காட்டுத் தொழில் செய்பவர்களின் ஜீவனோபாயம் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளமை, மீன்பிடியில் ஈடுபடுவதற்கு காணப்படும் தடைகள், வெளி ஊர்வாசிகளுக்கு மீன்பிடி அனுமதிப்பத்திரம் வழங்க்கப்படுவதும் உள்ளூர்வாசிகளுக்கான அனுமதிப்பத்திரம் மறுக்கப்படுவதும், அரசாங்க நியமனங்களில் பொத்துவில் இளைஞ்சர்களும் யுவதிகளும் உதாசீனம் செய்யப்படுதல் போன்ற பிரச்சினைகளின் மூலம் எமதூரின் பொருளாதாரம் இதுவரை முடங்கியே மூச்சு முட்டி கிடக்கின்றது…

சமூக கலாசாரம்

பணப்புளக்கத்துக்கு பழக்கப்பட்ட இளைஞ்சர்கள் ஒருபக்கம், பட்டிணியாள் பரிதவிக்கும் விதவைகள் மறுபக்கம், மாற்றுக்கருத்துக்கள் கொண்ட மதகுருமார்கள் இன்னொரு பக்கம், குடும்ப்பக் கஷ்டம் தீர்க்க வெளிநாட்டில் பரிதவிக்கும் சமூகம் ஒருபக்கம் எதுவந்தாலும் மாத வருமானத்தை வைத்தே எல்லாவற்றையும் சமாளிக்கும் திறன் கொண்ட அரச அதிகாரிகள் இன்னொருபக்கம் நாம் எல்லோரும் எமது எதிர்கால சந்ததியினர் சிறந்த முறையில் வாழும் சூழலை எமது வீடுகளில் இருந்தே உருவாக்க வேண்டும்.

அரசியல்

தனி மணித அதிகார துஸ்பிரயோகம், சமூக சாயம் பூசப்பட்ட அரசியல், தூர நோக்கற்ற அரசியல் வியுகங்கள், தலைமைத்துவ ஆசை, உல் கட்சி பூசல்கள், பழிவாங்கும் உணர்வுகள், திட்டமிடப்படாத செயற்திட்டங்கள், சமூக பிரச்சினைகள் வரும் போது ஓடி ஒழிக்கும் தலைமைகள், வெறுமனே இளைஞ்சர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு சகோதரர்கள் சுடப்பட்டாலும் கூட சாட்சி சொல்ல வருவதற்கும் எவரும் இல்லாத கட்டமைப்பு, தான் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற நோக்கில் தன உந்துரிலியை கொடுத்து சக அரசியல் வாதியை சுடச்சொள்ளும் கலாசாரம், காசுக்காக வேண்டி கண்ட இடத்தில கையெழுத்திட்டு கடற்கரை முழுவதையும் மாற்று மத ஆலயங்களுக்கு தாரை வார்க்கும் கண்மூடித்தனம், பொத்துவில் மக்களின் வாக்கு வங்கியை பிரித்து உள்ளூர் அரசியல் வாதியை தோற்கடித்து அதில் குளிர் காயும் கோமாளித்தனம்.

இந்தப்பிரசினைகளுக்கான மூல காரணங்களை கண்டறியும் முயற்சிகளோ அல்லது இவற்றிற்கான அறிவுடமையான ஆய்வுகளோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அத்தோடு இந்த பிரச்சினைகளுக்குரிய அடிப்படை காரணங்களையோ, பிரச்சினகளுக்கு காரணமாகவுள்ள சமுக, கலாச்சார, சகவாழ்வு சார்ந்த விடயங்கள் தொடர்பாகவோ ஆழமாக சிந்திக்காது எமது ஊரின் பிரச்சினைகளை தற்காலிகமாக் தீர்த்துக்கொள்ளும் பாங்கில் சுய நலப் போக்கிலேயே நாம் தீர்வுகளைப் பெற முனைந்திருக்கிறோம்.

இது எமது ஊர் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகளின் தீவிரத்தை, ஆழத்தை புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக எடுக்கப்பட்ட தற்காலிக தீர்வுகளாக இருப்பதால் எமது ஊர் எதிர் நோக்கும் எந்த சவாலையும் இதுவரை நிரந்தரமாக தீர்த்து வைக்க நமது தலைமைகளால் முடியவில்லை. இதன் காரணமாக நாம் சந்திக்கும் பிரச்சினைகளின் வடிவங்களும் தீவிரமும் அதிகரித்தே செல்கிறது.

எமக்கான பிரச்சினைகளை சரியாக விளங்கி அதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டியுள்ளது. எமது ஊரின் பல்லினத்துவ, மற்றும் மாறுபட்ட கலாச்சார நடைமுறைகளை புரிந்து கொண்டும் எமது இஸ்லாமிய விழுமியங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்டும் சம கால செல்நெறிக்கு ஏற்றவாறு தீர்வுகளை முன்வைக்க வேண்டும். இதற்கு சிறந்த அறிஞர்களின் தலைமைத்துவ வழிகாட்டல் எமக்கு தற்போதைய அதிமுக்கிய தேவையாகும்.

எனவேதான் நமது ஊரிற்கு பொருத்தமான அறிவுபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியுள்ளது. இதன் அவசியத்தை ஓரளவாவது புரிந்து கொண்டு சுய நல அரசியல் அபிலாசைகளை ஒதுக்கிவிட்டு சமுகத்தின் பிரச்சினைகளுக்கு ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டியது எமது அரசியல் தலைமைத்துவங்களின் கூட்டுப் பொறுப்பாகும்.

இதற்காக தமது காத்திரமான பங்களிப்புகளை செய்ய எமதூர் அரசியல் தலைமைகள் தயங்காது முன்வர வேண்டியுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலை உருவாகாத வரையில், எமதூர் தனக்கு முன்னால் உள்ள சவால்களுக்கு சரியாக முகம் கொடுக்க முடியாது போகும். ஏனெனில் நாம் முகங் கொடுக்கப் போகும் பிரச்சினைகள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்த தீவிரத்தோடு எம்மை எதிர்நோக்கியிருக்கின்றன என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இதனை நாம் சரியாக புரிந்து கொள்ளாது பொத்துவில் எதிர்நோக்கும் சவால்களை அவ்வப்போது சமாளித்து வருகிறோமே தவிர, அந்த சவால்களுக்கான சரியான தீர்வுகளை அடையாளம் கண்டு அறிவுபூர்வமாக ஒன்றுபட்ட சமுக அமைப்பாக செயற்பட்டு பிரச்சினைகளை எதிர்கொள்ள தொடங்கவில்லை.

அவரவர் சார்ந்துள்ள இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளின் கொள்கை அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தனித்தனி குழுக்களாகவே நாம் குரல் கொடுத்து வருகிறோம். அல்லது எமக்குள் இருக்கும் முரண்பாடான கருத்துகளை முற்படுத்தி மோதிக் கொள்கிறோம். எனவே நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வெறும் பௌதீக வளங்களை ஓடோடிச் சென்று வழங்குவதாலும் தற்போதுள்ள தொலைத் தொடர்பு வசதிகளைக் கொண்டு எமது நிலைமையினை உலகறியச் செய்வதாலும் நாம் எமது பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்த்துவிட முடியாது.

இவ்வாறு உணர்ச்சிப் பெருக்குடன் தம்மாலான பங்களிப்பை சமூகத்திலுள்ள பலரும் மிக தீவிரமாக செய்வதூனாடாக எமக்கான தற்காலிக ஆறுதல் கிடைத்தாலும் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் நிரந்தரமான தீர்வுகளை அடைந்து கொள்வதற்காக இன்னும் கடுமையாக திட்டமிட்டு உழைக்க வேண்டியுள்ளது.

இந்த சவால்களுக்கான சரியான தீர்வு என்ன? அதற்கான பொறிமுறை யாது? அந்த பொறிமுறைகளை அறிவு பூர்வமாக முன்வைப்பவர் யார்? இதனை முன்கொண்டு சென்று சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்பட வைப்பவர் யார்? இதற்கான சமுக அங்கீகாரத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதே எமக்கு முன்னாலுள்ள பெரும் சவாலாகும்.

-இம்தியாஸ் சலீம்-

Comments
Admin
By AdminJune 7, 2015 12:53
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

5 Comments

 1. Munaff Abdul
  Munaff Abdul June 7, 11:03

  நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைகள் உண்டு என்பதில் எவ்வித மருக்கமுடியாத உணமை இரந்த போதிலும் நீங்கள் குறிப்பிடும் அறிவாளிகளும் அரசியல்வாதிகளும் இருந்தும்இல்லை என்பது தான் உண்மை ஏனென்றால் இன்று நமதூரில் யாரை எடுத்துக் கொண்டாலும் எந்தவொரு வெளியூர் அரசியல்வாதியின் முகவராகவே அல்லது அவருக்காக உழைக்கும் தீவிர ஆதரவாளராகவே காணப்பாடுகின்றனர் மேலும் நீங்கள் குறிப்பிடும் சகல அம்சங்களைக் கொண்ட ஒரு தலைமைத்துவத்தை நமதூர் காண வேண்டும் என்றால் பழைய புரம்போக்கு அரசியலவாதிகளை எல்லாம் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு இளஞர்கள் தான் ஓரணியில் நின்று அத்தலைமைத்துவத்தை தேட வேண்டும் மேலும் நமதூரில் உள்ள எந்த ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் வாதியும் நமதூரின் பிரச்சினைகளுக்கு நிறந்தரமான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக எவ்வித முயற்சியும் செய்யவில்லை அதே போன்று கல்விசமுகமும் இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும் என்றில்லாமல் குறிப்பாக எந்தவொரு அரசியல் சாயம் பூசப்படாத சமுகம் ஒன்றை கட்டியெலுப்ப நாம் அனைபேறும் ஒன்றுபடுவோம்
  நாளைய சந்ததிக்காக இன்றைக்கே சிந்திப்போம்

  Reply to this comment
 2. Sameen Ab
  Sameen Ab June 8, 05:34

  சந்தோசம் அரிந்த வகைய்ல் பொத்துவில்லில்
  வசிக்கும் ஒவ்வொரு மணிதனுக்கும் இருக்கு
  ஆனால் அதை யாரும் மேற்கொல்வதில்லை
  அனைவரும் ஒன்ருசேர்ந்தால் நிச்சயமாக நம்
  கேள்விகலுக்கான பதில் இன்ஷாஅல்லாஹ்கிடைக்கும்

  பொத்துவில் மக்கலுக்கு பொதுவான வேன்டுகொள்
  நமக்கு எதுதேவயோ அதைநாமலாகவே
  தேர்ந்தடுத்துக்கொள்ளவேன்டும்
  தற்போது நீங்கல் செய்கின்ரவிடயம் நாலை
  உங்கல் சமுதாயத்தை பாதிக்குமாயன்ரு சற்றுசிந்தித்து சயல்படுங்கல்
  அது'உங்கலுக்கு நம் சமுதாயத்துக்கு நம் ஊருக்கு அதுவே சிரந்ததாகும்

  Reply to this comment
 3. Meeralabbai Zakkariya
  Meeralabbai Zakkariya June 9, 05:03

  நீஙகள் சொல்வது சரி.நான் உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்,நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்.மற்றது நம்முடைய மனங்கள் பரந்த விரிந்ததாக இருக்க வேண்டும்.இதுதான் எங்களுடைய ஊரின் பரச்சினை.ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதில்லை.இஃலாஸ் இல்லை.கள்ள மணங்கள்.இவைகள் அணைத்தும் முதலில் அகல வேண்டும். அப்போது அல்லாவின் உதவியால் எல்லாம் சரிவறும்.இல்லாமல் போணால் மற்றொறு பர்மாதான்.அல்லா பாதுஙாக்க வேண்டும்.

  Reply to this comment
 4. Marzook Pottuvil
  Marzook Pottuvil August 12, 15:38

  ஊர் மக்களையும் ஊரையும் பற்றி கவளைப்படூம் அவர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன் ஊரில்லுள்ள ஒரு சிலஅசியல்வாதிகள் பொத்துவில் பிரதேச சபை தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்றவுடன் முதலில் சொன்ன வார்தை என்ன தெரியுமா முதலில் நான் செலவு செய்த பணத்தை எல்லாம் எடுத்ததுக்கு அப்புரம் தான் உங்களுக்கு சேவை.??? இப்படிப் பட்டவரகளிடமிருந்து.நாம் நமது ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் இனிவரும் காலங்களில் ( இம்தியாஸ் சலிம்) நீங்கதான் O+ ஆக இருக்கும் நீங்கதான் தகுதியாவர் எனவே தயாராக இருங்க இன்ஷா ல்லலாஹ்.

  Reply to this comment
 5. Ramzy
  Ramzy March 15, 12:01

  தற்போதைய அரசியல்வாதிகளில் பெருபாலானோரை பிரதேச சபையிலிருந்து மக்களால் துடைத்து வீசப்படாத வரை சாபக்கேடு தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

  தனக்கு கிடைக்கின்ற அற்ப சலுகை ஒன்றுக்காக அயோக்கியன் ஒருவனை உத்தமனாக பரம்பரை செய்கின்ற இழிசெயலிலிருந்து இளைஞர்கள் ஒதுங்காதவரை அந்த அரசியல் அவலம் தொடரும்.

  Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

seventeen + seven =