பெரும்பான்மை இனத்தவர்களால் பொத்துவில் காணி அபகரிப்பு !

Admin
By AdminJune 1, 2015 13:45Updated

பொத்துவில் வட்டிவௌிப் பிரதேசத்தில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு (LRC)க்கு சொந்தமான காணி பெரும்பான்மைச் சமூகத்திற்கு ஒருவருக்கு 20 பேச்சர்ஸ் அளவில் பகிர்ந்தளிப்பதற்காக நில அளவை செய்யப்பட்டது. இதன் போது அம்பாரை காணிச் சீர்திருத்த ஆணைக்குழு உத்தியோகத்தரும் சமூகமளித்திருந்தார்.  2015.05.30 சனிக்கிழமை இடம் பெற்ற இந்நிகழ்வு பொத்தவில் பிரதேச செயலாளருக்கும் கூட தெரியாமல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இவ்வேளை பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் MSM. மர்சூக் ஆசிரியர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி முன்னாள் தவிசாளர் MSM. மர்சூக் ஆசிரியர் அவர்களும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான MAM. இஸ்மாலெப்பை (சலாம்) அவர்களும் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து நில அளவையாளருடனும், காணிச் சீர்திருத்த ஆணைக்குழு உத்தியோகத்தருடனும் முரண்பட்டு காணி பகிர்ந்தளிப்பதை நிறுத்துமாறு கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் . இதன் பின்னர் அவர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக முன்னாள் தவிசாளர் MSM. மர்சூக் அவர்கள் ஶ்ரீ.ல.மு.காங்கிரஸ் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான கௌரவ MT. ஹஸன் அலி MP, பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் பொத்துவில் பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு தொலைபேசி ஊடாக தெரிவிக்கப்பட்டது.

unnamed (1)

unnamed (5)

இப்பிரதேசத்தில் உள்ள ஏழைகள் பலர் குடியிருப்பதற்கு காணி இல்லாது அலைமோதும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிகழ்வு ஆச்சரியத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

unnamed (4)

இது விடயத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என நாம் கேட்டுக்கொள்வதுடன் பொத்துவில் பிரதேச காணிப்பிரச்சனைகளுக்கு உரிய அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் பொத்துவில் பறிபோகும் நிலமையை அடையும்.

-‌Pottuvil net Power Team-

Comments
Admin
By AdminJune 1, 2015 13:45Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

4 Comments

 1. Aliyar Mohammed Jahan Faja
  Aliyar Mohammed Jahan Faja June 1, 08:49

  Yes sure naangelum theekulipom

  Reply to this comment
 2. Luha Faja
  Luha Faja June 1, 08:49

  Yes sure naangelum theekulipom

  Reply to this comment
 3. Luha Faja
  Luha Faja June 1, 08:49

  Yes sure naangelum theekulipom

  Reply to this comment
 4. Luha Faja
  Luha Faja June 1, 08:49

  Yes sure naangelum theekulipom

  Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

15 − 7 =