மூடப்பட்ட மபாஸா பள்ளிவாயலின் உண்மை நிலவரம் மற்றும் பின்னனி என்ன?

Admin
By AdminMay 31, 2015 12:55Updated

mafasa masjith news

பொத்துவில் 05 ம் பிரிவிலுள்ள மஸ்ஜிதுல் மபாஸா பள்ளிவாயல் கடந்த வியாழன் (28/05/2015) அன்று நீதிமன்றத்தினால் மூடப்பட்டது. இது பற்றி பலரும் பல விதமான கதைகளை கூறினர் .

உண்மைத்தன்மையை அறியும்படி பொத்துவில் நெற் மஸ்ஜிதுல் மபாஸா பள்ளிவாயலின் தலைவர் MBM. அபுசாலி அவர்களை தொடர்பு கொண்டது .

இது பற்றி அவர் கூறுகையில்;

பள்ளிவாயல் நிர்மாணிப்பதற்கான வளவு குறித்த ஒரு நபரிடமிருந்து கிடைத்தது , அதற்குள் பள்ளி நிர்மாண வேலை ஆரம்பிக்கும் போதே வளவுக்கு உரிமையாளர் நான் என சகோதரர் தாஹிர் (லாபிர் வைத்தியரின் சகோதரன் ) கூறியுள்ளார் .

ஆனால் வேறு நபரின் பெயரில் இருந்து பெற்றுக்கொண்டமையினால் முன்னாள் தலைவர் அதனை உண்மையற்றது என கருதி ஏற்றுக்கொள்ளவில்லை .

அதன் பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . கடந்த 8 க்கும் மேற்பட்ட வருட காலமாக குறித்த வழக்கு நடந்து வந்தது , அதன் தீர்ப்பு ( குறித்த வளவு தாஹீரிட்கே சொந்தமானது ) இந்த வாரம் வழங்கப்பட்டதை அடுத்து போலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகள் பள்ளிவாயலுக்கு வருகை தந்து கடந்த வியாழன் லுகர் தொழுகையின் பின் (12.45pm) பள்ளிவாயலை மூடி உரிமையாளரான தாஹிரிடம் திறப்பு வழங்கப்பட்டது ,

அதன் பின்னர் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.  குறித்த பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக வருபவர்கள் , அந்த பகுதியில் தொழில் செய்பவர்கள் மற்றும்பொத்துவில் உலமா சபை மூலமாகவும் குறித்த உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன.

அதன் மூலம் 40 இலட்சம் பணம் கொடுத்தால் பள்ளிவாயல் மீண்டும் கிடைக்கும் என அவர்கள் கூறியதை அடுத்து மேலும் பள்ளிவாயல் நிர்வாகம், பொது நலன் விரும்பிகள் மற்றும் மௌலவி அவர்களின் பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதி விலையாக 25 இலட்சம் என முடிவாக்கப்பட்டுள்ளது .

இந்த தொகை தற்போது பள்ளி நிர்வாகத்தினால் செலுத்த முடியாமல் உள்ளதால் பொது மக்களையே நாடவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது .

குறித்த பணத்தை செலுத்தும் வரை எதிர்வரவிருக்கும் ரமழானை வரவேற்க ஒப்பந்த அடிப்படையில் பள்ளிவாயல் திறக்கப்படவுள்ளதாகவும் பேச்சுக்கள் நடைபெறுகின்றது .

மூடப்பட்டிருக்கும் பள்ளிவாயலை மீண்டும் திறக்க 25 இலட்சம் பணம் தேவைப்படுகின்றது .

 

இது தொடர்பான மேலதிக உண்மை தகவலை உறுதிப்படுத்த ,

பொத்துவில் உலமா சபை தலைவர் – மௌலவி ஆதம் லெப்பை-  00 94 77 67 34 385

மஸ்ஜிதுல் மபாஸா பள்ளிவாயல் தலைவர் –  MBM.அபுசாலி – 0094 77 80 50 544

பள்ளிவாயலின் வங்கி கணக்கு :

AccountName :-   MASJITHUL MAFASA

AccountNO :-        164 2001 9001 4534

Bank –           :-          peoples bank

(உண்மை தன்மையையும் வங்கி விபரத்தையும் மற்றுமொரு முறை உறுதி செய்த பின்னர் உதவிகளை செய்யுங்கள் )

நேர்காணல்:-  கபூர் நிப்ராஸ் பொத்துவில் நெற் செய்தியாளர் 

 

 

Comments
Admin
By AdminMay 31, 2015 12:55Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

9 Comments

 1. Hazeem Ahamed Mohideen
  Hazeem Ahamed Mohideen May 31, 07:36

  இன்னொருவரின் காணியினுள் பள்ளிவாயல் கட்டுவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை இன்னொருவருக்கு உரித்தான காணிக்குள் பள்ளிவாயலை கட்டியது மாத்திரமில்லாமல் குறித்த காணியின் உரிமையாளரை பலரும் பேஜ்புக்கில் பிழையாக விளங்கி இட்ட கருத்துக்கள் ஏற்புடையதல்ல ஏன் எனில் இஸ்லாம் இன்னொருவருடைய சொத்தை அபகரிக்கச் சொல்லவில்லை.

  Reply to this comment
 2. Alameenubeen Deen
  Alameenubeen Deen May 31, 11:16

  நீ ஒரு

  Reply to this comment
 3. Alameenubeen Deen
  Alameenubeen Deen May 31, 11:18

  நீங்கள் செய்த உதவி மார்க்க ரீதியான அல்லது …பல. மனம் வங

  Reply to this comment
 4. Alameenubeen Deen
  Alameenubeen Deen May 31, 11:20

  நான் என் மனம் போல பல முறை ஒரு கை கருணைக் கடல் நீர் உள்ள பல வகையான தரவு மற்றும் பல வகையான நோய் எதிர்ப்பு இயக்கம்

  Reply to this comment
 5. Kamardeen Aswan
  Kamardeen Aswan May 31, 11:30

  இன்னொருவரின் காணியினுள் பள்ளிவாயல் கட்டுவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லைதான். அதற்காக அல்லாஹ்வுக்காக கட்டபட்டிருக்கும் பள்ளிவாயலை மூடிவிட வேண்டாம். இது ஓர் ஊர் சம்பந்தப்பட்டது இல்லை மார்க்கம் சம்பந்தப்பட்டது. இஸ்லாத்துக்கு வெளியில் இருபவர்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்க கடமை பட்டுள்ளோம். அதனை மீட்பதற்கு அனைவரும் கடமை பட்டுள்ளோம். அல்லாஹ் இதற்காக உதவுவான். அஸ்ஸலாமு அலைக்கும்.

  Reply to this comment
 6. Abdul Gafoor Abdul Bary
  Abdul Gafoor Abdul Bary May 31, 20:50

  its not fair, for food you forgot the person who is giving you food.

  Reply to this comment
 7. Abdul Gafoor Abdul Bary
  Abdul Gafoor Abdul Bary May 31, 20:51

  ts not fair, for food you forgot the person who is giving you food.

  Reply to this comment
 8. Mohamed Razmi
  Mohamed Razmi June 3, 20:47

  மபாஸா பள்ளி விடயத்தில் சிலர் Dr.லாபிர் அவர்களை குறை கூறி தவறாக பேசுகின்றனர். ஆனால், அவரை குறை கூறுவதற்கில்லை.
  பள்ளி காணி Dr.லாபிர் அவர்களின் சகோதரரான தாஹிரினுடையது.
  அவரே பள்ளியை போலிஸின் உதவியுடன் மூடி திறப்பை கொண்டு சென்றார்.
  இந்த விடயம் குறித்து நான் Dr.லாபிரிடம் வினவிய போது அவர் கூறியதாவது,
  பொத்துவில் ஊர் மக்களுக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால், இந்த மபாஸா பள்ளி விடயத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
  பள்ளி சம்பந்தமாக என்னிடம் பேச வந்தவர்களிடம் நான் எனது சகோதரரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று தெளிவாக கூறி விட்டேன்.
  அவருடைய காணி விடயம் குறித்து அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
  மேலும், எனது சகோதரரை நான் கொழும்பு சென்ற இடத்தில் சந்தித்து பேசினேன். அவர் 30 லட்சம் கொடுத்தால் பள்ளி திறப்பை தருவதாக கூறினார்….என Dr.லாபிர் அவர்கள் தெறிவித்தார்.

  Reply to this comment
 9. Mohamed Razmi
  Mohamed Razmi June 3, 21:50

  மபாஸா பள்ளி விடயத்தில் சிலர் Dr.லாபிர் அவர்களை குறை கூறி தவறாக பேசுகின்றனர். ஆனால், அவரை குறை கூறுவதற்கில்லை.
  பள்ளி காணி Dr.லாபிர் அவர்களின் சகோதரரான தாஹிரினுடையது.
  அவரே பள்ளியை போலிஸின் உதவியுடன் மூடி திறப்பை கொண்டு சென்றார்.
  இந்த விடயம் குறித்து நான் Dr.லாபிரிடம் வினவிய போது அவர் கூறியதாவது,
  பொத்துவில் ஊர் மக்களுக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால், இந்த மபாஸா பள்ளி விடயத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
  பள்ளி சம்பந்தமாக என்னிடம் பேச வந்தவர்களிடம் நான் எனது சகோதரரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று தெளிவாக கூறி விட்டேன்.
  அவருடைய காணி விடயம் குறித்து அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
  Srilankamuslims.lk எனும் தளத்தில் நான் கூறியதாக செவ்வி காண்பவர் கூறுவதில் உண்மையில்லை. அவை வெறும் போலி வதந்திகள். நான் ஏன் பொய் கூற வேண்டும் ??
  மேலும், எனது சகோதரரை நான் கொழும்பு சென்ற இடத்தில் சந்தித்து பேசினேன். அவர் 30 லட்சம் கொடுத்தால் பள்ளி திறப்பை தருவதாக கூறினார். மேலும் மபாஸா பள்ளி பிரச்சினைக்கு விரைவில் நல்லதோர் தீர்வு பெற வேண்டும்…….என Dr.லாபிர் அவர்கள் தெரிவித்தார்.
  ஆகவே., மபாஸா பள்ளி பிரச்சினையில் சம்பந்தம் இல்லாத…எமது ஊரில் 20 வருடங்களுக்கு மேலாக சேவை புரிந்த வைத்தியரான Dr.லாபிர் அவர்களை குறை கூறுவதில் நியாயமில்லை.
  -நலன் விரும்பி –

  Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

4 + 5 =