பொத்துவில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதுவரை விமோசனமில்லை

Admin
By AdminApril 6, 2015 18:49Updated

pvl newsகிழக்கு மாகா­ணத்தின் தென்­தி­சையில் அமைந்­துள்ள பொத்­துவில் மிகவும் அழ­கா­ன­தொரு பிர­தே­ச­மாகும். உல்­லா­சப்­ப­ய­ணி­களின் விருப்­பத்­திற்­கு­ரி­ய­தாக விளங்கும் இப்­பி­ர­தே­சத்தின் காணி­க­ளுக்கு மதிப்பு அதி­க­மாகும். இதனால் பொத்­துவில் பிர­தே­சத்தின் கடற்­க­ரையை அண்­டிய காணி­களை மாத்­தி­ர­மல்ல வயற் காணி­க­ளையும் அப­க­ரித்துக் கொள்­வதில் பலரும் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

உல்­லாசப் பய­ணி­க­ளுக்­காக கட்­டப்­பட்­டுள்ள ஹோட்­டல்கள், விடு­திகள் போன்­றன கடற்­க­ரைக்கு அருகில் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் சுமார் 80 வீத­மா­ன­வைகள் கடற்­கரை பாது­காப்பு எல்­லை­க­ளுக்­குள்­ளேயே அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் இங்­குள்ள மீன­வர்­களின் தொழில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மீன­வர்­களின் வள்­ளங்­க­ளையும் தோணி­க­ளையும் கரையொதுக்கி வைத்­துக்­கொள்­ளவும் வலை போன்ற உப­க­ர­ணங்­களை வெயிலில் காய வைப்­ப­தற்கும் போதிய இட­மில்­லாத நிலையில் இப்­பி­ர­தேச மீன­வர்கள் கஷ்ட நிலையில் உள்­ளார்கள்.

பொத்­துவில் மீன­வர்கள் மாத்­தி­ர­மின்றி விவ­சா­யி­களும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். பொத்­துவில் பிர­தே­சத்திலுள்ள கராங்­கோவா, செல்­வ­வெளி, ஆமை­வட்­டுவான், துக்­கல்ல, வேகாமம், தாராம்­பள, செங்­காமம், புலி­பி­டிச்­ச­சேனை, கட்­டங்­குடா ஆகிய இடங்­களில் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய சுமார் ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான ஏக்கர் வயற்­கா­ணிகள் வன பரி­பா­லன திணைக்­க­ளத்­தி­னா­லும்­மற்றும் வேறு நட­வ­டிக்­கை­க­ளி­னாலும் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.
மேற்­படி இடங்­களில் ஆமை­வட்­டுவான், துக்­கல்ல, வேகாமம், தாராம்­பள, புலி­பி­டிச்ச சேனை, கட்­டங்­குடா ஆகிய பிர­தே­சங்­களில் விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட பொத்­துவில் பிர­தேச விவ­சா­யிகள் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளினால் 1990ஆம் ஆண்­டிற்குப் பின்னர் விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வில்லை.

2009 ஆம் ஆண்டு பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் யாவும் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் இப்­பி­ர­தே­சங்­களில் தமக்­கு­ரிய காணி­களில் மீண்டும் விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்­காக சென்ற போது பெருந்­தொ­கை­யான காணி­களை வன­ப­ரி­பா­லன திணைக்­களம் தம்­வ­சப்­ப­டுத்தி எல்­லை­யிட்டு இருப்­ப­தாக விவ­சா­யிகள் தெரி­விக்­கின்­றார்கள்.

இது பற்றி பொத்­துவில் பிர­தேச செய­லா­ள­ரிடம் முறை­யிட்ட போது வன­ப­ரி­பா­லன திணைக்­களம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் தங்­க­ளுக்கு தெரி­யா­தென்று தெரி­வித்­த­தாக விவ­சா­யிகள் தெரி­விக்­கின்­றார்கள்.

இவ்­வாறு பொத்­துவில் பிர­தே­சத்தில் காணிப் பிரச்­சி­னை­களும் மீன­வர்­களின் பிரச்­சி­னை­களும் மற்றும் பாட­சா­லை­களில் மிகுந்த வளப்­பற்­றாக்­கு­றை­களும் காணப்­ப­டு­கின்ற நிலையில் அவற்றை நிவர்த்தி செய்து தரு­மாறு அதி­கா­ரி­களை கேட்­டுக்­கொண்ட போதிலும் அர­சி­யல்­வா­திகள் பலரும் இப்­பி­ரச்­சி­னை­களை தீர்த்து வைப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தனர். எனினும் எந்தப் பிர­யோ­ச­னமும் கிடைக்­க­வில்லை என பிர­தேச வாசிகள் தெரி­விக்­கின்­றனர். பொத்­துவில் ஆதார வைத்­தி­ய­சா­லை­யிலும் பல குறை­பா­டுகள் உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. பொத்­துவில் பிர­தேச மக்­களின் பிரச்­சி­னைகள் இவ்­வாறு இருக்­கின்ற நிலையில் அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வைக்­காது இங்­குள்ள வாக்­கு­களை அர­சியற் கட்­சிகள் பெற்று பிழைப்பு நடத்திக் கொண்­டி­ருப்­பது கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

பொத்­துவில் பிர­தே­சத்தில் சுமார் 15,000 க்கும் அதி­க­மான முஸ்லிம் வாக்­குகள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வாக்­கு­களில் சுமார் 12 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட வாக்­கு­களை முஸ்லிம் காங்­கிரஸ் பெற்­றுள்­ளது. ஏனைய வாக்­கு­களை தேசிய காங்­கி­ரஸும் ஏனைய கட்­சி­களும் பெற்­றுள்­ளன. பொத்­துவில் பிர­தேச சபையின் அதி­காரம் முஸ்லிம் காங்­கி­ர­ஸிடம் இருந்து வருகிறது.

அம்­பாறை மாவட்­டத்தில் பொத்­துவில் பிர­தேச முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட நான்கு (மு.கா.03, தே.கா 01) பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கின்ற போதிலும் இவர்கள் இம்­மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைப் பெற்றுக் கொடுக்­க­வில்லை.

அது­மட்­டு­மன்றி இவர்­களின் வாக்­கு­களின் மூல­மாக தெரிவு செய்­யப்­பட்ட 6 (மு.கா 03 தே.கா 03) கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்கள் உள்­ளார்கள். இவர்கள் கூட பொத்­துவில் பிர­தேச மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­ப­தற்கு எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை.பொத்­துவில் பிர­தேச மக்­களின் வாக்­குகள் மூல­மாக அதி­க­மான அர­சியல் இலா­பங்­களை முஸ்லிம் காங்­கி­ரஸே பெற்று வந்­துள்­ளது. இருப்­பினும் முஸ்லிம் காங்­கிரஸ் பொத்­துவில் பிர­தேச முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வதில் காட்டும் அதீத பிர­யத்­த­னங்­களை கட்­சியின் கட்­ட­மைப்­பிலும் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளிலும், தொழில் வாய்ப்­புக்­க­ளிலும் காட்­டு­வ­தில்லை என இப்­பி­ர­தேச முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வா­ளர்கள் பலரும் தெரி­விக்­கின்­றார்கள்.

அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள பிர­தே­சங்­களில் முஸ்லிம் காங்­கி­ரஸின் கட்­ட­மைப்­புக்கள் நேர்த்­தி­யாக இல்­லா­துள்ள அதே­வேளை, பொத்­து­விலில் மிகவும் மோச­மாக இருப்­ப­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
பொத்­து­வி­லுக்­கான மத்­திய குழுவை அமைப்­ப­திலும் அமைப்­பாளர் ஒரு­வரை நிய­மிப்­ப­திலும் முஸ்லிம் காங்­கிரஸ் மந்­த­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது எனவும் அண்­மையில் பொத்­துவில் மத்­திய குழுவை அமைப்­ப­தற்கு

முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தி­நி­திகள் முயற்­சி­களை எடுத்த போதும் குழப்­பத்தில் முடி­வ­டைந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் 1994 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் அர­சாங்­கத்தில் சமுர்த்தி மூல­மா­கவும் துறை­முகம் ஊடா­கவும் பல தொழில் வாய்ப்­புக்­களை வழங்­கி­ய­தாக தெரி­விக்கும் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வா­ளர்கள் தற்­போ­துள்ள முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் அவ்­வாறு தொழில் வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ள­தாக தெரி­விக்­கின்­றார்கள். முஸ்லிம் காங்­கிரஸ் தங்­க­ளது பிர­தே­சத்தில் கண்­து­டைப்­பாக ஒரு சில அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றார்கள்.

இதே போன்­றுதான் இக்­கட்­சி­களின் மூல­மாக தெரிவு செய்­யப்­பட்ட 6 மாகாண சபை உறுப்­பி­னர்­களும் தங்­க­ளது ஊர்­களின் அபி­வி­ருத்­தி­களில் கவனம் செலுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் எனவும் குற்றம் சாட்­டு­கின்­றார்கள். ஆயினும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமா லெவ்வை ஒரு சில அபி­வி­ருத்திப் பணி­களை மேற்­கொண்­ட­தா­கவும் நன்றி தெரி­விக்­கின்­றார்கள்.

மேலும் பொத்­துவில் பிர­தே­சத்தில் உள்ள பாட­சா­லை­களில் சுமார் ஐம்­பது ஆசி­ரி­யர்கள் பற்­றாக்­கு­றை­யாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பொத்­துவில் பிர­தேச பாட­சா­லைகள் அக்­க­ரைப்­பற்று கல்வி வல­யத்தின் கீழ் உள்­ளன.

பாட­சா­லை­களில் காணப்­படும் ஆசி­ரியர் பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்­வ­தற்கு கிழக்கு மாகாண கல்­வித்­தி­ணைக்­களம் நட­வ­டிக்­கை­களை எடுத்த ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அர­சி­யல்­வா­தி­களின் தலை­யீ­டு­க­ளினால் தடுக்­கப்­பட்­ட­தாக பொத்­துவில் பிர­தேச கல்­வி­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றார்கள். அக்­க­ரைப்­பற்று வல­யத்தில் உள்ள கோட்­டங்­களில் இருந்து பொத்­துவில் கோட்­டத்­திற்கு ஆசி­ரி­யர்­களை வழங்கி ஆசி­ரி­யர்­களை சமப்­ப­டுத்­து­வ­தற்கு எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடந்த காலங்­களில் தேசிய காங்­கிரஸ் தடை­யாக இருந்­த­தா­கவும் தற்­போது முஸ்லிம் காங்­கி­ரஸின் மாகாண சபை உறுப்­பினர் இருவர் தடை­யாக இருப்­ப­தா­கவும் பொத்­துவில் பிர­தேச மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றார்கள்.

பொத்­துவில் பிர­தே­சத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் கட்­ட­மைப்­புக்­களில் காணப்படும் குழப்பங்களால் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் விரக்தியடைந்தவர்களாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
இச்சூழலை தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பொத்துவில் பிரதேசத்திற்கான அமைப்பாளரையும் மத்திய குழுவையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளைஅரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கூட பொத்துவில் பிரதேச மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்தவொரு அரசியற் கட்சியும் நடவடிக்கையினை எடுக்காதிருப்பது பொத்துவில் பிரதேசத்தினை புறக்கணித்துக் கொண்டிருப்பதற்கான மற்றுமொரு சான்றாகும்.
மேலும் புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களை பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பல பிரதேசங்களில் தமது அமைச்சின் மூலம் இணைப்பு அதிகாரிகளை நியமித்துள்ள போதிலும் பொத்துவில் பிரதேசத்தில் எந்தவொருவரையும் தமது அமைச்சின் மூலமாக மு.கா. நியமிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


– சஹாப்தீன்- நன்றி வீரகேசரி
http://epaper.virakesari.com:8080/home/index?editionId=19&editionDate=05/04/2015

Comments
Admin
By AdminApril 6, 2015 18:49Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
  1. Maajith Marzook
    Maajith Marzook April 6, 13:22

    பொத்துவிலின் நிலைமையை தௌிவாக சொல்லியது நேற்றைய வீரகேசரி பத்திரிகை…
    இது கூட நமது ( வெளியூர் அரசியல்வாதிகளை கூட்டி வந்து பிழைப்பு நடத்தும்) உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை….

    Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

5 × 4 =