அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலானகிறிக்கெட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் பிரதேச செயலக அணி சம்பியன்
அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான 07 பேர் மட்டுப்படுத்தப்பட்ட 05 ஓவர் கொண்ட கிறிக்கெட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் பிரதேச செயலகம் வெற்றியீட்டி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகங்களும், அம்பாரை மாவட்ட செயலகமும் கலந்து கொண்ட போட்டித்
தொடரில் இறுதிப் போட்டிக்கு பொத்துவில் பிரதேச செயலக அணியும், மகாஓயா பிரதேச செயலக அணியும் தெரிவுசெய்யப்பட்டது.
இரண்டு அணிகளுக்குமான இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) பானமை பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
அணியின் தலைவர் எம்ஜ. ராபியின் தலைமையில் முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய பொத்துவில் பிரதேச செயலக அணியினர் 05 ஓவர் முடிவில் 100 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மகாஓயா அணியினர் மொத்தமாக 23 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தனர். மொத்தமாக 77 மேலதிக ஓட்டங்களால் பொத்துவில் பிரதேச செயலக அணியினர் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் பிரதேச செயலக அணியினரின் இவ்வெற்றிக்கு பெரிதும் ஒத்துழைப்பையும், வழிகாட்டலையும் வழங்கிய பிரதேச செயலாளர் என்எம்.முசர்ரத் அவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக அணித்தலைவர் எம்.ஜ. ராபி கருத்து தெரிவித்தார்.
செய்தியாளர்- எம்.ஏ.தாஜகான்
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment