(Keeral Trailer) பொத்துவில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு முழு நீளத் திரைப்படம் ‘கீறல்’
Story Highlights
- பொத்துவில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு முழு நீளத் திரைப்படம் "கீறல்".
- கீறல் திரைப்படமானது ஒர் சமுக நோக்கிலமைந்த கருத்துக்ளை தன்னகத்தே உள்வாங்கி முழுநிறைவான படைப்பாக மிளிர்கின்றது.
பொத்துவில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு முழு நீளத் திரைப்படம் “கீறல்”.
கலைவான் கழகத்தின் தயாரிப்பில் கலைநிலா M. S. M. றிஸ்வி அவர்களின் எழுத்து இயக்கத்தில் கீறல் திரைப்படம் பொத்துவில் கலைஞர்களை முற்றுமுழுதாக உள்வாங்கித் தயாரிக்கப்பட்டு திரையிடவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 2015.03.15 ம் திகதி
இன்றுடன் கீறல் திரைப்படத்தின் அனைத்துவிதமான தயாரிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளமையை உத்தியோகபுர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
கீறல் திரைப்படமானது ஒர் சமுக நோக்கிலமைந்த கருத்துக்ளை தன்னகத்தே உள்வாங்கி முழுநிறைவான படைப்பாக மிளிர்கின்றது.
இத்திரைப்படத்தில் இயக்குனர் றிஸ்வி அவர்களுடன் ஹிமாயூன் Tr, , நௌபர் Tr, ஹபில், நதீகா, முகைடீன், லத்தீப் Tr, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படமானது பொத்துவிலின் பெரும்பாலான பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக தங்களது அரிய நேரங்களையும் படப்பிடிப்புத் தளங்களையும் தந்து ஒத்துழைப்பு வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு எமது கலைவான் கழகத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment