பொத்துவில் பெண், கட்டுநாயக்கவில் கைது

Admin
By AdminMarch 8, 2015 22:18Updated

Arrested Clipart

போலி கடவுச்சீட்டை பயன்படுத்திய டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைதந்திருந்து பொத்துவிலைச்சேர்ந்த 32வயதான பெண்ணொருவரை குற்றப்புலானய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர், தனது உண்மையாக கடவுச்சீட்டு மற்றும் மாலைத்தீவுக்கு செல்வதற்கான பயணச்சீட்டு ஆகியவற்றை கடவுச்சீட்டு கருமப்பீடத்தில் கையளித்து பயணிப்பதற்கு தேவையான ஆவணங்களை பெற்று குடிவரவு, குடியகல்வு பிரிவுக்குச்சென்று மாலைத்தீவுக்கு செல்வதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் இருக்கின்ற கடைசி கருமப்பீடத்தில், தான் டுபாய் ஊடாக இத்தாலி செல்வதற்கு வருகைதந்ததாக தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் பிரிதொரு கடவுச்சீட்டையும் காண்பித்துள்ளார்.
அதன்பிரகாரம் அவர், எமிரேட்ஸ் விமானசேவைக்கு சொந்தமான ரி.கே.653 இலக்க விமானத்திலேயே டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயற்சித்துள்ளார். இதன்போதே, அதிகாரிகள் அப்பெண்ணை கைதுசெய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இத்தாலியில் வசிக்கின்ற இலங்கை பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த பெண்ணின் படத்தை பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டு மற்றும் தேவையான ஆவணங்களை தயாரித்து அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

போலியான ஆவணங்களை தயாரிப்பதற்காக சந்தேகநபரான அந்த பெண், கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளர்.
சந்தேகநபரான அந்த பெண்ணை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த செய்தி tamilmirror எனும் இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

Comments
Admin
By AdminMarch 8, 2015 22:18Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

8 + 7 =