பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தகாத வார்த்தையினால் பொத்துவிலானை பற்றி மட்டமாக பேசினார்

Admin
By AdminFebruary 26, 2015 22:54Updated

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தகாத வார்த்தையினால் பொத்துவிலானை பற்றி மட்டமாக பேசினார்

Muhaideen bavaகரையோர மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எம்.அப்துல் மஜித் அவர்கள் பொத்துவிலுக்கு எந்த சேவையினையும் செய்யவில்லை. என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி. பைசால் காசிம் அவர்கள் பொத்துவில் பிரதேச சபையில் தெரிவித்த ஒரு கருத்துக்கு மறுப்பு வார்த்தை பேசுவதற்காக வேண்டி பைசால் காசிம் பாராளுமன்ற உறுப்பினரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் தகாத வார்த்தையினால் பொத்துவிலானை பற்றி மட்டமாக பேசினார். இவ்வார்த்தையினை தான் வன்மையாக கண்டிப்பதாக தொலைபேசியில் பாராளுமன்ற உறுப்பினரோடு பேசிய மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்மா பள்ளிவாயலின் தலைவரும் ஜக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ. முகைதீன் பாவா மௌலவி தனது கண்டனத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மௌலவி அவர்கள் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு பொத்துவில் மக்கள் கடந்த காலங்களில் வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த மக்களுக்கு நன்றி கெட்ட வார்த்தையினை பாராளுமன்ற
உறுப்பினர் தெரிவித்தது வேதனைக்குறியதாகும். இவர் பொத்துவிலுக்கு கடந்த காலத்தில் செய்த அபிவிருத்திகள்
என்ன? என்பது பற்றி தேர்தல் காலங்களில் தெளிவு படுத்தவுள்ளோம். என்று கருத்து தெரிவித்தார்.

செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்

Comments
Admin
By AdminFebruary 26, 2015 22:54Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

1 × 1 =