சட்டவிரோத துப்பாக்கிகளுடன் பொத்துவில் பகுதியில் ஐவர் கைது

Admin
By AdminJanuary 3, 2013 21:11Updated

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் பொத்துவில் பகுதியில் ஐவர் கைது

பொத்துவில் பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்புக் கட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பொத்துவில் றொட்டை வயல் பகுதியில் வேளாண்மைக் காவலுக்கு நின்றதாகக் கூறப்படும் 5 விவசாயிகளையே விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து,  றொட்டை வயல் பகுதியில் வேளாண்மைக் காவலுக்காக அமைக்கப்பட்ட வாடிகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 சட்டவிரோத உள்ளூர் தயாரிப்புக் கட்டுத்துப்பாக்கிகளை கைப்பற்றியதுடன், 5 விவசாயிகளையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். கைப்பற்றப்பட்ட சட்டவிரோத உள்ளூர் தயாரிப்புக் கட்டுத்துப்பாக்கிகளுடன் விவசாயிகளை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர். இச்சந்தேக நபர்களை பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்

Comments
Admin
By AdminJanuary 3, 2013 21:11Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

twelve + one =