கி.மாகாண ஆளுநராக SSPமஜீதை நியமிக்கவும்

Admin
By AdminJanuary 16, 2015 12:01

கி.மாகாண ஆளுநராக SSPமஜீதை நியமிக்கவும்

ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் மஜித்

ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் மஜித் ssp

முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட கரையோரப்பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான எம். அப்துல் மஜீதை கிழக்கு மாகாண ஆளுனராக நியமித்து சுதந்திர கிழக்கை சுவாசிக்க கைகோர்த்த மக்களை கௌரவப் படுத்துமாறும், கௌரவ மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கமைவாக எம். அப்துல் மஜீதை கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்குமாறு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உரிய நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென அம்பாறை மாவட்டம் உட்பட கிழக்கு வாழ் மக்களின் சார்பாக சீமோ நிறுவனம் வேண்டுகோளாகவும், கோரிக்கையாகவும் முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் இந்நிறுவனம் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாரை மாவட்டத்தை தளமாகக் கொண்டு இயங்கும் சீமோ நிறுவனம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அம்பாரை மாவட்டம் முழுவதும் ஆதரவு திரட்டி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு ஜனாதிபதியின் வெற்றியிலும் பங்காளியாக செயற்பட்டுவருகின்றமை யாவரும் அறிந்ததே.
இதேபோன்று முன்னாள் நாடாளுமன்ற மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஐ.தே.க. அம்பாரை மாவட்ட கரையோரப்பிரிவு அமைப்பாளருமான எஸ்.எஸ்.பி. அப்துல் மஜீத் அவர்களும் தன்னலம் பாராது அம்பாரை மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணம் முழுவதும் மிகவும் தீவிரப்பிரச்சாரப் பணியிலும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு ஜனாதிபதி அவர்களின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக செயற்பட்டார் என்பதையும் ஞாபகப்படுத்துகின்றோம்.
எம். அப்துல் மஜித் அவர்கள் நீண்டகாலமாக தமிழ் – முஸ்லிம் உறவின் பாலமாக செயற்பட்டு வருபவர். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்  எம். அப்துல் மஜீத் அவர்களின் அரசியல் களமானது தமிழ்- முஸ்லிம் மக்களிடையே பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.
அதாவது கிழக்கு வாழ் தமிழ் – முஸ்லிம் உறவின் உன்னத தலைவர் என வர்ணிக்கப்பட்டார். கிழக்கு வாழ் தமிழ்-முஸ்லிம் உறவினை மேலும் வலுப்படுத்த இம்மக்களின் இன்னல்களை நன்கு அறிந்தவரும், மக்களின் மனங்களை புரிந்தவருமான முன்னாள் நாடாளுமன்ற மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட கரையோரப்பிரிவு அமைப்பாளருமான  எம்.அப்துல் மஜீத் அவர்களை.
கிழக்கு மாகாண ஆளுனராக நியமித்து சுதந்திர கிழக்கை சுவாசிக்க கைகோர்த்த மக்களை கௌரவப் படுத்துமாறும், கௌரவ மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கமைவாக எஸ்.எஸ்.பீ அப்துல் மஜீத் அவர்களை கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்குமாறு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உரிய நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமேன சீமோ நிறுவனம் அம்பாரை மாவட்டம் உட்பட கிழக்கு வாழ் மக்களின் அன்பான வேண்டுகோளாகவும், கோரிக்கையாகவும் இதனை முன்வைக்கின்றதென நிறுவனத்தின் தலைவர் ஏ.ஜி.கபீர் மற்றும் செயலாளர் ஏ.எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கின்றனர்.
டீ.கே.ரஹ்மத்துல்லா
சம்சுல் ஹுதா
Comments
Admin
By AdminJanuary 16, 2015 12:01
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

18 + 8 =