எஸ் எஸ் பி மஜீதை இன்னமும் தவறாக சித்தரிப்பது தன் மேல் தானே உமிழ்ந்து கொள்வது போல் உள்ளது.
முன்னாள் பாராளுமன்ற, மாகணசபை உறுப்பினர் ஆன எஸ் எஸ் பி மஜீதுக்கு கிழக்கின் ஆளுனராக தரம் உயர்த்த ஜக்கிய தேசியக்கட்சி ஆசைப்படுகின்றது,
இது தலைமைத்துவம் அற்ற பொத்துவிலுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் எனவும் கிழக்கின் விடிவுக்கு தமிழ் பேசும் மக்களுக்கும் நல்ல செய்தியாகவே நடு நிலை வாதிகளினால் பார்க்கப்படும் இவ்வேளை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ள பொத்துவில் வாழ் சில்லரை அரசியல்வாதிகளும் அவர்களின் சகாக்களும் எஸ் எஸ் பி மஜீதை இன்னமும் தவறாக சித்தரிப்பது தன் மேல் தானே உமிழ்ந்து கொள்வது போல் உள்ளது.
பொத்துவில் காழ்ப்புணர்ச்சி கொண்ட உள்ளூர் அரசியல் வாதிகளே நாம் சுயமாக சிந்திக்க வேண்டிய காலம் கிழக்கில் அதிகமாக வாழ்வது தமிழ் பேசும் மக்களே ஆக எம்மால் இப்போதைக்கு நிருவாக ரீதியான மாவட்டத்தை பெற முடியாவிட்டாலும் கிழக்கின் ஆளுனராக வருகின்ற தமிழ் பேசும் ஒரு முது நிலை அரசியல் வாதியும் முன்னால் பொலிஸ் அதிகாரியுமான இவரை ஆதரிப்பதால் நாம் இழந்து விட போவது ஒன்றும் இல்லை, (சில நேரம் பொத்துவில் வாழ் சில்லறை அரசியல் வாதிகளின் கட்டப்பஞ்சாயத்தும் சாரய அரசியலும் வேண்டும் என்றால் நின்று போகலாம்) மாறாக நாமும் மக்களும் எஸ் எஸ் பி மஜீதினால் ஒரு சில அபிவிருத்திக்களை பெற்றுக்கொள்ளாலம் என்பதை மனதில் நிறுத்தி அவருடன் இனைந்து உங்களால் ஆன சில அபிவிருத்திகளுக்கு துனை போவது நம்மூரின் எதிர்காலத்திற்கு சிறந்தது.
-மக்சூத் முகம்மட் றம்ஸான்-
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment