மு கா. தலைவர் ஹகீமை பேச விடாமல் தடுக்க சூழ்ச்சி நேற்றைய பொத்துவில் கூட்டத்தில்

Admin
By AdminDecember 29, 2014 13:42Updated

மு கா. தலைவர் ஹகீமை பேச விடாமல் தடுக்க சூழ்ச்சி நேற்றைய பொத்துவில் கூட்டத்தில்

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மைத்திரி பக்கம் இணைந்ததை சில பிரதிநிதிகளுக்கு பிடிக்கவில்லை போலும் இதனால் அவரை பொத்துவில் பிரதான வீதியில் அமைந்திருக்கும் மாபெரும் மேடையில் உள்வாங்கக்கூடாது என்னும் குறியில் சிலர் இருந்தனர்.

my 3 7

கெளரவ முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஏற்கனவே தலை நகரிலிருந்து பொத்துவிலுக்கு சமூகம் கொடுத்துவிட்டார் பின் நேரடியாக அறுகம் விடுதிக்கும் சென்றிருந்தார். காரணம் பொது வேட்பாளர் இன்னும் பிரசன்னமாகாததால் நேரம் சென்றுகொண்டுதான் இருக்கிறது பொது வேட்பாளரின் வருகை தாமதமாகத்தான் உள்ளது பிறகு வேட்பாளரின் தரப்புக்கு தொலைபேசி மூலம் அழைத்து- நாம் இங்கு பல மணி நேரம் காத்துக்கிடக்கிறோம் வரவில்லையா என பேசியிருக்கிறார் பிறகு பல நிமிடத்துக்கு பிறகு பொதுவேட்பாளர் பிரசன்னமானார் அதன் அடுத்த நிமிடத்துக்கு பிறகு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பிரசன்னமானார் அந்த மேடைக்கு.

இதில் ஒரு சூழ்ச்சி ஏற்கனவே ஐ. தேகட்சியின் பொத்துவில் காரர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தது,
பொது வேட்பாளர் பேசி முடிந்ததும் கூட்டம் முடிந்த மாதிரி இருக்க வேண்டும் ரவூப் ஹக்கீமும் பேச இடமளிக்க கூடாது அப்படி பேசினாலும் மேடையில் பொது வேட்பாளர் இருக்க விடக்கூடாது என்று பல திட்டம் தீட்டப்பட்டது.

அதனடிப்படையில் பொதுவேட்பாளர் பேசி முடித்தார் பிறகு மேடையில் இருந்தவர்களெல்லாம் ஏற்கனவே திட்டம் தீட்டியது போல எழும்பி நகர ஆரம்பித்தார்கள் உடனே ரவூப் ஹக்கீம்- பொதுவேட்பாளரின் அருகில் சென்று தான் பேச இருப்பதை சொன்னார் my3 அதை ஏற்று நாகரிகமாக அமர்ந்திருந்தார் பின் ரவூப் ஹக்கீம் பேச்சை சிங்கள மொழியில் தொடர்ந்தார் இதற்க்கு மக்களின் அனுமதியையும் கேட்டுக்கொண்டார் பேச்சை தொடர்ந்தார்
ஏன் இவ்வளவு காலமும் தாமதித்தேன் என்பதையும், கட்சியின் உறுப்பினர் ஒருவர் விடாது கொண்டுவந்து தாங்களுடன் சேர்த்திருக்கிறேன் என்றும் சொன்னார் சிறிது நேரம் கழித்து பேச்சு முடிய மக்கள் சந்திப்பு நிறைவுற்றது.

திட்டமெல்லாம் பொதுவேட்பாளருக்கு தெரியவில்லை தெரிந்தால் நாம்தான் வெட்கப்பட வேண்டும்
முஸ்லிம்கள் என்றால் ஒற்றுமை இருக்க வேண்டும் வேற்றுமை இருக்க கூடாது நமக்கு நடக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவரும் ஒரு ஸ்தாபனமாக செயற்படுகிறார் அவ்வாறிருக்கும் போது ஏந்தான் இந்த குரோதம்.

மீசையின் ஆசை நிறைவேறவில்லை,
மீண்டும் ஒருமுறை தோற்றுப்போன மீசையின் நரித்தந்திரம் என்கிறார் நண்பர்.

நன்றி- களப்புக்கட்டு பொத்துவில்.

Comments
Admin
By AdminDecember 29, 2014 13:42Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

1 + 14 =