பொத்துவிலில் நடைபெற்ற மைத்திரியின் பொதுக்கூட்டம்- படங்கள்

Admin
By AdminDecember 29, 2014 11:51

பொத்துவிலில் நடைபெற்ற மைத்திரியின் பொதுக்கூட்டம்- படங்கள்

நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் தத்தமது மதங்களை சுதந்திரமாக பின்பற்றுவதற்கான நடவடிக்கையினையும் சரியாக பேண வேண்டிய உரிமையினையும் வழங்குவேன். என்று பொது வேட்பாளர் மைத்திரி சிரிசேன தெரிவித்தார்.

பொத்துவில் பிரதான வீதியில் கரையோர மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் மஜித் அவர்களின் தலைமையில் நேற்று (28) நடை பெற்ற பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து நடை பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே மைத்திரி சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தனது உரையில் , யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ஸ அவர்கள் சர்வதிகார ஆட்சியினை அரங்கேற்றி ஆட்சியில் அமர்த்திய மக்களை மறந்து விட்டு மந்திரி சபையின் வாயினை அடக்கி ராஜபக்ஸ கம்பனியினரின் ஆட்சிக்கு வித்திட்டார். சிராணியினை வெளியேற்றியமை மூலம் நீதித்துறையில் சுதந்திரம் இல்லாமல் ஆக்கினார். மூன்று வேளை சாப்பிடமுடியாது. சிறுவர் துஸ்பிரயோகம் மோசடி கள்ளக்கடத்தல் என்பவற்றிற்கு வித்திட்டு சுதந்திரமான வியாபாரத்தை நடத்த முடியாமல் ஆக்கினார்.

நான் ஜனாதிபதியானால் நிட்சயமாக இவற்றையெல்லாம் ஒழித்து புதிய அரசாங்கத்தின் மூலம் சிறப்பான ஆட்சியினை அமைப்பேன் என்றார் மைத்திரி
இந்நிகழ்வில் அமைச்சர்களான ராஜித கருஜெயசூரிய சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கிம் மற்றும் அசாத் சாலி மாகாண சபை உறுப்பினர்கள் நகர பிரதேச சபை உறுப்பினர்கள் புத்திஜீவிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

my 3 7

my 3 8

my3 6

my3 pottuvil1

my3 pvl2

 

my3 pvl3

my3 pvl4

my35

my311

my3010

-செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்-

Comments
Admin
By AdminDecember 29, 2014 11:51
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

eighteen − fourteen =