வர்த்தகப்பிரிவில் பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி சாதனை.

Admin
By AdminDecember 28, 2014 10:55Updated

வர்த்தகப்பிரிவில் பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி சாதனை.

school logo]

 

இம்முறை நடை பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் நேற்று (27)வெளியிடப்பட்டது.

பெறுபேற்றின் அடிப்படையில் பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின் வர்த்தகப் பிரிவு 100 வீத சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

அல் இர்பான் மகளிர் கல்லூரியின் உயர்தர வர்த்தகப் பிரிவானது ஆசிரியர் வளப் பற்றாக்குறையுடன் 2012 ஆண்டு  முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

2014 இல் நடை பெற்ற க.பொ.த உயர்தரத்தில் 04 மாணவிகள் தோற்றி 100 வீத சித்தியைப் பெற்றுள்ளனர்.

ஏம்.எஸ்.சரோத் ஜஹான் எனும் மாணவி 3ஏ பெற்று மாவட்ட நிலையில் 14 ம் இடத்தைப் பெற்றுள்ளார்.
3A , Z.score 1.7647 ,District Rank – 14 (சுல்தான் ஆசிரியரின் மகள்)

இம்மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் பெறும் பங்காற்றிய கல்லூரியின் அதிபர் ஏ.எல்.கமறுதீன் மற்றும் கற்பித்த ஆசிரியரான எம்.எச். அப்துல் வஹாப் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.

குறித்த ஆசிரியர் எம்.எச்.வஹாப் பொருளியல் , வணிகக்கல்வி ஆகிய பாடங்களை கற்பித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கணக்கீட்டுக்கான ஆசிரியர் அல் இர்பானில் இல்லாத நிலையில் பொத்துவில் மத்திய கல்லூரியின் ஆசிரியர் அ.மு.பஸ்மின் அவர்கள் பிரத்தியேகமாக பாடசாலைக்கு வருகை தந்து கற்பித்துக் கொடுத்தார் என்பதும் சுட்டிக்காட்டப் படவேண்டியதே.

புள்ளிகள் பெற்ற மாணவிகளின் விபரங்கள்.

01.Mohammed Sulthan Saroth Jahan- 3A,Z.score 1.7647 ,Distric Rank 14
(சுல்தான் ஆசிரியரின் மகள்)

02.Mohammed Hanifa Fathima Kalitha.
2A B,Z .score 1.5335 ,Distric Rank 47 (ஹணீபா ஓடாவியின் மகள்)

– செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்-

Comments
Admin
By AdminDecember 28, 2014 10:55Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

one × three =