நாளை பொத்துவிலில் பொதுக்கூட்டம் :முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பொதுவேட்பாளர் மைத்திரி,ரணில், சஜித் பிரமதாச வருகை

Admin
By AdminDecember 27, 2014 17:12

நாளை பொத்துவிலில் பொதுக்கூட்டம் :முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பொதுவேட்பாளர் மைத்திரி,ரணில், சஜித் பிரமதாச வருகை

Subair Haji

Subair Haji

பொது வேட்பாளரை ஆதரித்து பொத்துவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை 2014.12.28 நடை பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கரையோர மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் மஜித் சற்று முன்னர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினையும் வெள்ளத்தால் பொத்துவில் போக்குவரத்து வீதிகள் சேதமடைந்திருப்பதனையும் கருத்திற் கொண்டே பொது வேட்பாளரின் பொதுக்கூட்டத்தை ஒத்திவைக்க நினைத்திருந்தோம் ஆனாலும் பொத்துவில் மக்கள் பொது வேட்பாளர் மைத்திரியின் பொதுக்கூட்டத்தை ஆவலுடன் தாய் பிள்ளையை எதிர்பார்த்திருப்பது போன்று இருப்பதனால் மீண்டும் நாளை பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து பொதுக்கூட்டம் நடை பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அப்துல் மஜித் தெரிவித்தார்.

நாளை நடை பெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பொதுவேட்பாளர் மைத்திரி ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரமதாச மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஏற்பாட்டு ஒழுங்கினை பொத்துவில் ஜூம்மா பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம்.சுபையிர்(ஹாஜியார்) செய்து வருகின்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் மஜித்

ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் மஜித்

செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்-

Comments
Admin
By AdminDecember 27, 2014 17:12
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

one × 1 =