பொத்துவில் பிரதேசத்தில் 18ஆயிரத்து 300பேர் பாதிப்பு.6முகாம்களில் 2ஆயிரத்து 800பேர். சியம்பலாண்டுவபாதைதுண்டிப்பு. உல்லாசப்பயணிகள் நிர்க்கதி

Admin
By AdminDecember 27, 2014 17:04

பொத்துவில் பிரதேசத்தில் 18ஆயிரத்து 300பேர் பாதிப்பு.6முகாம்களில் 2ஆயிரத்து 800பேர். சியம்பலாண்டுவபாதைதுண்டிப்பு. உல்லாசப்பயணிகள் நிர்க்கதி

1
வியாழக்கிழமை (25) மாலைமுதல் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழைவெள்ளத்தினால் பொத்துவில் பிரதேசத்தில் 4,643 குடும்பங்களைச் சேர்ந்த 18,382  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 824 குடும்பங்களைச் சேர்ந்த 2,847பேர் முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஏனையோர் நண்பர்கள் உறவினர்களின் இல்லங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும்பிரதேசசெயலாளர் வெள்ளிக்கிழமைமாலை வெளியிட்டுள்ளதகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹ்ரிய்யாவித்தியாலயம், பஹ்ரிய்யாபள்ளிவாயல்,சிங்களமகாவித்தியாலயம்,  அல்-ஹுதாவித்தியாலயம்,  பி-11  மீள் எழுச்சிக்கட்டிடம், சங்கமான்கண்டிகிறிஸ்த்தவ இல்லம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சமைத்த உணவும், ஏனையவர்களுக்கு உலர் உணவும் மற்றும் அத்தியாவசியத் தேவைகளைபெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்பிரதேசசெயலாளர் என்.எம். முஸர்ரத் தெரிவித்தார்.

இதுபோல்,லாகுகலபிரதேசசெயலகப் பிரிவில் 2 ஆயிரத்து 407 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 622 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தங்கவைப்பதற்காகலாகுகலையில் நான்கு தற்காலிக முகாம்களும், பாணமையில் ஐந்துதற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துகிடைக்கும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,பொத்துவில் சியம்பலாண்டுவபிரதானபாதையில் 3அம் கட்டையிலும், 10ஆம் கட்டையிலும் அமைக்கப்பட்டிருந்த பாலம் மழைவெள்ளத்தில் அள்ளுண்டுபோனதால்.  பொத்துவிலுக்கும் சியம்பலாண்டுவைக்குமானபோக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால்,பொத்துவிலுக்குவரவிருந்தஉல்லாசப் பயணிகள்,லாகுகலபகுதியில் எப்பக்கமும் செல்லமுடியாது,நிர்க்கதிநிலைக்குஉள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர,நாவலாறுபகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தவிவசாயிகள் மூவர்,ஹெடஓயா ஆறு பெருக்கெடுத்ததால் ஏற்பட்டவெள்ளத்தில் இருந்துபாதுகாக்கமரங்களில் ஏறி இருந்துள்ளனர்  இவர்களை கடற்படைமுகாம் சிப்பாய்கள்  மீட்டுவந்துள்ளனர்.

2

3

4

 

5

6

7

8

9

10

11

12

13

-எம்.ஏ.தாஜகான்-

Comments
Admin
By AdminDecember 27, 2014 17:04
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

eleven + 18 =