முற்போக்கு முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு ஆதரவு. 

Admin
By AdminDecember 27, 2014 16:53

முற்போக்கு முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு ஆதரவு. 

ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலசிரிசேனவுக்குபூரணஆதரவுவழங்குவதாக,முற்போக்கு முஸ்லிம் காங்கிரஸின் மத்தியகுழுவில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றியதீர்மானத்தின் பிரதிகள்,பொதுவேட்பாளரின் தலைமைக் காரியாலயத்திற்கும், பொதுவேட்பாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் சட்டத்தரணி டாக்டர் கே.சமீம் தெரிவித்தார்.

இது தொடர்பில்,எதிரணிபொதுவேட்பாளர் மைத்திரிபாலசிரிசேனவை அவரது இல்லத்தில் சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொத்துவில் தொகுதியின் முன்னாள் பிரதான அமைப்பாளரான சட்டத்தரணி எம். இஸ்மாயில் ஆதம்லெப்பை தலைமையிலான குழுவினர் ஆதரவை நேரடியாகத் தெரிவித்ததாகவும் செயலாளர் தெரிவித்தார்.

பொதுவேட்பாளரைச் சத்தித்தகாங்கிரஸின் முதல்வர் தலைமையிலானகுழுவில்,தன்னோடு, உப செயலாளர்  எ.எம்.ஜெஃபர், பொருளாளர் ஓய்வுபெற்ற விவசாய விரிவாக்க உத்தியோகத்தர் எஸ். ஆதம் பாவாஆகியோரும் இடம்பெற்றிருந்ததாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

-செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்-

Comments
Admin
By AdminDecember 27, 2014 16:53
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

seventeen − sixteen =