கிரீஸ்மேன் துப்பாக்கி சூடு, சம்பவத்தில் சாட்சி சொல்ல மறுத்த SSP மஜீத் உண்மையா? நாடகமா?

Admin
By AdminOctober 25, 2014 15:35Updated

கிரீஸ்மேன் துப்பாக்கி சூடு, சம்பவத்தில் சாட்சி சொல்ல மறுத்த SSP மஜீத் உண்மையா? நாடகமா?

true or falsதவம் அவர்கள் எஸ் எஸ் பி மஜீத் அவர்களுக்கு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார் அது தொடர்பில் எஸ் எஸ் பி மஜீத் தரப்பிலிருந்து எவ்விதமான பதில்களும் வரவில்லை முக்கியமாக அங்கு குறிப்பிடப்பட்ட விடயத்தில் பொத்துவிலில் கிரீஸ் ‌மனித விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பம் தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதனை தவம் இவ்வாரு குறிப்பிட்டிருந்தார் “சுட்டுக் கொல்லப்பட்ட சகோதரனுக்காக சாட்சி சொல்வதில் நழுவிக் கொள்ளவில்லையா” என்று கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இது எந்த அளவு உண்மை என்று நிரூபிக்க வேண்டிய ‌தேவை எஸ் எஸ்பி மஜீத் இற்கு உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது.
ஏனெனில் அப்பாவியான ஒரு முஸ்லீம் அநியாயமான முறையில்சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்டவர் பொத்துவிலைச்சேர்ந்த முஸலீம் காங்கிரசின் போராளி ,கொஞ்ச வாக்குவித்தியாசத்தில் பி. சபைக்கு வர முடியாத மு. கா உறுப்பினர், இவ்வாறு இருக்க
தனது கண்னுக்கு முன் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கபட்டது அப்படி இடம்பெற்றதாயின் அது தற்செயலாக இடம்பெற்றதா? அல்லது வேண்டுமென்றே சுடப்பட்டதா என்பதை எங்களை விட பொலிஸ்காரரான தங்களுக்கு நன்றாக‌ தெரியும் .

ஆக மொத்தத்தில் இவ்வாறு மரணித்த நமது சகோதரனிற்காக நீங்கள் சாட்சி சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றமையானது மக்கள் மத்தியில் மனவருத்ததை ஏற்படுத்துகிறது.

அப்படி நீங்கள் சாட்சயமளிப்பதிலிருந்து விலகிக்கொண்டிருந்தால் நீங்கள் உங்களை பெற்ற மண்ணிற்கு செய்த மாபெரும் துரோகமாவே அச்சம்பவத்தை கருத‌ முடியும்.

எஸ் எஸ் பி மஜீத் கிரீஸ் ‌மனித விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பம் தொடர்பில் உண்மையாக சாட்சி சொல்லாமல் நழுவிக்கொண்டால் ஏன் அந்த நேரத்தில் மு காங்கிரஸ் ஆர்வலர்களால் இந்த காட்டிக்கொடுப்பை மேற்கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுகின்றதல்லவா?

இப்படி பார்கின்றபோது பொத்துவிலில் அநியாயமாக சுட்டு கொல்லப்பட்ட மு காங்கிரசின் போராளியை கொன்ற பாவம் முகாங்கிரஸிற்கும் சேரும் என்பது மறுக்கமுடியாது. இப்படி ஒரு சம்பவத்தை மு.காங்கிரஸ் மறைத்திருக்குமாக இருந்தால் என்னவென்று சொல்லிக்கணக்கு தீர்ப்பது?

எஸ் எஸ் பி மஜீத், நீங்கள் அப்படியாக சாட்சியளித்தீர்கள் என்றால் அது தொடர்பான விபரங்களை மக்களுக்கு தாருங்கள் நாங்கள் யார் எம் மண்ணிற்கு படு குளிதோன்டுகின்றார்கள் என்பதை புரிந்துகொள்கிற நேரம் வந்தாகிவிட்டது.

-அஹமது புத்திரன்.-
Comments
Admin
By AdminOctober 25, 2014 15:35Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
  1. Firas
    Firas October 26, 19:36

    For your kind information judicial witness cant be publicised. No one is aware of this except people who are aware of the judicial system. An individual like Thavam is not aware of these. Its not his fault because he is not educated to such extent. Please dont blame a person who is genuine.

    Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

one × 3 =