ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க முடியும்: SSP மஜீட்

Admin
By AdminOctober 19, 2014 14:06

ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க முடியும்: SSP மஜீட்

SSP Majeedஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே முஸ்லிம் சமூகம் தமது சுதந்திரமான மத வழிபாடுகளையும் கலை, கலாசாரங்கள், பொருளாதாரம் மற்றும் நிலபுலங்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.ஏ. அப்துல் மஜீட் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினராக இருந்த இவர், ஐக்கிய தேசிய கட்சியில் வெள்ளிக்கிழமை (17) உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டார்.

இது பற்றி சனிக்கிழமை (18) வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது இன்று முஸ்லிம் சமூகத்தை பயங்கரமானதொரு நிலைக்கு கொண்டு செல்கின்றது.

அக்கட்சியானது தனது குறிக்கோள், நோக்கம் என்பனவற்றை மறந்து, தனிப்பட்டவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் ஒரு இயக்கமாக பாதைமாறி செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறு செல்வதன் மூலம் சமூகத்துக்கு எந்தவிதமான நன்மைகளையும் பெற்றுக் கொடுக்க முடியாது. மாறாக இனவாதங்களை பேசி சமூகத்தை சந்தேகக் கண்கொண்டு நோக்கும் நிலையயையும் பேராபத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

இன ரீதியான சிந்தனைகளை விதைத்து பெரும்பான்மை இனத்தவர்களும் இன ரீதியாக சிந்தனை செய்வதற்கு வழிசமைத்து கொடுத்தவர்கள் சிறுபான்மையின அரசியல்வாதிகளே ஆகும்.

இந்த நாட்டில் இனரீதியான அரசியல் கலாசாரம் இருக்கும் வரையில் சிறுபான்மையின சமூகங்கள் பாரிய ஆபத்துக்களை எதிர் நோக்க வேண்டிய நிலைக்கே தள்ளப்படும்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போதே முஸ்லிம்கள் அதிக நன்மைகளைப் பெற்று வந்துள்ளனர். அதனால்தான் முஸ்லிம்கள் இன்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் நிற்கின்றனர்.

முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையின அரசியல் கட்சியான, ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் சேர்ந்து கொண்டே தற்போது நாட்டில் ஏற்பட்டு வரும் கடும் இனவாதப் போக்குடைய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியும்.

அளுத்கம வன்செயலின் போது எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினாரும் குரல் கொடுக்காத போது, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவப்பெரும தமது உயிரையும் துச்சமாக மதித்து முஸ்லிம்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல், தனது பதவியையும் இராஜினாமா செய்வதற்கு முற்பட்டார் என்பதனை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையத்துவம் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி பிழைக்க முடியாது. றவூப் ஹக்கீம் தலைமைப் பொறுப்பையேற்று இன்றுவரை சமூகத்துக்காக செய்த பணி என்ன? என்று அவரிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

எனவே இனியும் அக்கட்சியில் இருப்பது சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவே நினைத்து அக்கட்சியிலிருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணைந்துள்ளேன்.

முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்துவம் இனியும் முகத்திரையிட்டு மக்களை ஏமாற்ற முடியாது. மத்திய மாகாணத்துக்கு செல்ல முடியாது. அங்கு முஸ்லிம்கள் ஆசாத்சாலியை பலப்படுத்தியுள்ளனர். அவ்வாறே ஊவா மாகாணத்துக்கு சென்ற போது மக்கள் மறக்க முடியாத பரிசினை கொடுத்துள்ளனர்.

இனிமேல் அரச தரப்பிலுள்ள எந்தக்கட்சியையும் அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்களும் நம்பப்போவதில்லை. அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி என்னை நியிமித்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சென்று கட்சி புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்கவுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

-ரீ.கே.றஹ்மத்துல்லா-

Source:-  குறித்த செய்தி tamil.dailymirror.lk எனும் இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி.

 

Comments
Admin
By AdminOctober 19, 2014 14:06
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

5 + eleven =