சபைத்தலைவரே! ஒரு மாத காலம் கடந்த நிலையிலும்  பிரதே சபையினால் செப்பனிடத்தவறும் அல்கலாம் வீதி

Admin
By AdminJune 7, 2014 16:29Updated

சபைத்தலைவரே! ஒரு மாத காலம் கடந்த நிலையிலும்  பிரதே சபையினால் செப்பனிடத்தவறும் அல்கலாம் வீதி

ஒரு மாதங்களுக்கு முன்னர் பொத்துவில் பிரதேச சபையினால் குடிநீர் விணியோகம் செய்வதெற்காக தோண்டப்பட்ட அல்கலாம் பாடசாலை வீதி இன்றுவரை மூடப்படாமல் கிடங்கிலேயே இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
6

கொங்ரீட்டால் இடப்பட்ட குறித்த வீதியினை பொத்துவில் பிரதேச சபையினாலேயே தோண்டப்பட்டதாகவும் அந்த குழி சுமார் 2 வாரங்கள் மூடப்படாமல் இருந்து வந்தது.

பின்னர் கடந்த ஒரு வாரத்தி்ற்கு முன்னர் இந்த வீதியினை மீள் கொங்ரீட் இடுவதற்காண கம்பிகள் பொருத்தபட்டது இது பொருத்தப்பட்டு ஒரு வாரங்கள் கடந்துள்ளது ஆனாலும் இன்னும் இந்த குழி கொங்ரீட்இட்டு நிரப்பபடாமலிருக்கின்றது.

இந்த அல்கலாம் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் தொடக்கம் குறித்த வீதியினை பயண்படுத்துகின்ற எல்லோருக்கும் இதனால் கஸ்டமாக உள்ளது .

இதனால் விபத்துக்களும் ஏற்படுகின்றது இரவில் குறித்த பகுதியில் பயணிப்பது கடும் கஸ்டமாக உள்ளது பொத்துவில் பிரதேச சபைின் உறுப்பினரின் வீடு கூட இந்த வீதயில் உள்ளது.
நேற்றுக்கூட இரண்டு பேர் இந்த குழியில் விழுந்து காயம் அடைந்தனர் என குறித்த பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கின்றார்.

மேலும் இதுதொடர்பில் தாம் முறையிட்டும் எந்த பிரதிபளிப்பும் இல்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

6

3

இவ்வாறான மந்தமான வேலைத்திட்டங்களினால் பொதுமக்கள் அடைகின்ற இன்னல்களை தீர்த்துவைக்கவேண்டிய பொருப்பு பிரதேச சபைக்கு உள்ளது.

எனவே குறித்த வீதியினை விரைவில் அடுத்த தினங்களுக்குள் செப்பணிட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்படவேண்டியதேவை பொத்துவில் பிரதே சபைக்குறியதாகும்.

பொத்துவில் பிரதேச சபைத்தலைவ‌ர் கௌரவ வாசித் அவர்களே இது உங்களின் கவனத்திற்கு.

குறித்த வீதி தொடர்பில் பொத்துவில் நெற் அவதானத்துடன்.
பொத்துவிலின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக இருப்போம்.

படங்கள் மற்றும் நேர்காணல்- NZR  (பொத்துவில் நெற் புலன் விசாரணைக்குழு)

அறுகம்பை பாலத்தில் மின் விளக்குகள் எறியப்டாமை ஏன்?

விரைவில் உங்கள் பொத்துவில் நெற் இல்.

1 2 3

Comments
Admin
By AdminJune 7, 2014 16:29Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

8 + 10 =