பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள ‘வெளிநாட்டு மாப்புள்ள’ பாடல் வெளியீட்டு விழா

Admin
By AdminMay 6, 2014 15:36Updated

பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள ‘வெளிநாட்டு மாப்புள்ள’ பாடல் வெளியீட்டு விழா

unnamedunnamedஇசையமைப்பாளர் ‘ஜெ’யின் இசையில் ‘நான்’ திரைப்படப் புகழ் பாடலாசிரியர் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள ‘வெளிநாட்டுமாப்புள்ள’ பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 3.மணிக்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ளதமிழ்FM வானொலி கலையகத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய காலகட்டத்தின் முக்கியமான கதையாடலை கருவாக கொண்டு உருவெடுத்துள்ள ‘வெளிநாட்டு மாப்புள்ள’ பாடல்,வெளிநாட்டு மணமகனை திருமணம் செய்வதனால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை நகைச்சுவையோடு கிராமியமணத்தோடு பேசுகின்றது.

இலங்கையின் பிரபல கானா பாடகர் நவகம்புர கணேஸ் பாடியுள்ள இப்பாடலுக்கான ஒலிக்கலவையை ‘சென்னையில் ஒருநாள்’திரைப்படத்தில் பணிபுரிந்த ஷியு மேற்கொண்டுள்ளார்.

தமிழ்FM மற்றும் இலண்டன் ‘வெற்றி’ வானொலி ஆகியவற்றின் ஊடக அனுசரனையில் நடைபெறும் இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வுஇன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் இலங்கையிலும் இலண்டனிலும் ஒரே நேரத்தில் நிகழவுள்ளன.

தமிழ்FM வானொலியின் பணிப்பாளர் திரு.பரணிதரன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகஇலங்கையின் பிரபல இசையமைப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் வருகை தருகின்றார். கௌர அதிதிகளாக பிரபல பாடகர் மகிந்தகுமார், ஒலிபரப்பாளர் ‘மனிதநேயன்’ இர்ஷாத் ஏ. காதர், இசையமைப்பாளர்களான கருப்பையாபிள்ளை பிரபாகரன், பிருந்தன் ராகவன், டிரோன் பெர்ணன்டோ, செந்தூரன் ஆகியோர் வருகை தருகின்றனர்.

இந்நிகழ்விலே இறுவட்டின் முதல் பிரதியினை நிகழ்வின் விசேட விருந்தினராக கலந்துகொள்ளும் ‘தேசமான்ய’, ‘தேச சக்தி’ டாக்டர்
அப்துல்கையூம் அவர்கள் பெற்றுக்கொள்வார்.
விழா ஒருங்கிணைப்பினை அறிவிப்பாளர்களான எஸ்.ஜனூஸ்,பாலமுரளி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

Comments
Admin
By AdminMay 6, 2014 15:36Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

20 − fourteen =