பொத்துவில் மத்திய கல்லூரி மாணவனுக்கு ஜனாதிபதி சான்றிதழ்

jiyath ahamed
By jiyath ahamedApril 15, 2014 23:00Updated

பொத்துவில் மத்திய கல்லூரி மாணவனுக்கு ஜனாதிபதி சான்றிதழ்

அரச மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பொத்துவில் மத்திய கல்லூரியைச் சேர்ந்த லாபீர் முகம்மட் சிறான் சல்மான் என்ற மாணவன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

pottuvil.net_mahinda_2
கடந்த திங்கட்கிழமை (07.04.2014) கொழும்பு பண்டாரநாயக்க சர்வேதச ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஐக்கியத்திற்கான மாநாட்டில் வைத்து இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

pottuvil.net_mahinda_1
இவர் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்று பல பரிசில்களைப் பெற்றள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ரீதியில் தனது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை தேடித் தந்த இம்மாணவனை பாடசாலை சமூகம் மற்றம் பொது மக்கள் வாழ்த்தியுள்ளார்கள்.

pottuvil.net_seran_4

மேலும் இது போன்ற பல சாதனைகளைப் பெற எமது பொத்துவில்.நெற் சார்பாக வாழ்த்துகின்றோம்.

pottuvil.net_seran_5

நன்றி
தலைமை செய்தியாளர்
எம்.எஸ்.சம்சுல் ஹுதா

Comments
jiyath ahamed
By jiyath ahamedApril 15, 2014 23:00Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
  1. p.t.abdul raheem
    p.t.abdul raheem April 16, 09:50

    நான் அப்துல றஹிம் மிக நள்ள பலசெய்திகளை வழங்கும் பொத்துவில் நெற்றுக்கு என் மனமார்ந்த நண்றிகள்

    Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

five + 2 =