பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் – படங்கள்

Admin
By AdminFebruary 15, 2014 12:05Updated

பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் – படங்கள்

மாவட்ட மீனவ பேரவை ஏற்பாடு செய்த மக்களின் பல்வேறுபட்ட கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரை பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் நடைபெற்றது.

மாவட்ட மீனவ பேரவையின் தலைவர் கே.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கிழக்கு மாகாண 3 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

protst ulla2
protst ulla1
இந்த ஆர்ப்பாட்டபேரணியில் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்களின் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதில் மீன் விலை உயர்த்துதல்,
மானியமாக எண்ணெய் வழங்கக் கோரல்,
இழந்த காணிகளை மீள வழங்குதல்,
ஒலுவில் துறைமுக மீனவர் பாதிப்புக்கு நஸ்டஈட்டை வழங்கக் கோரல்,
பொத்துவில் பொதுச்சந்தை பிரச்சினைக்கு தீர்வைக் காணல்,
பொத்துவில் ஆசிரியர் பிரச்சினை மற்றும் பாதை அமைப்பு வேலைகளை துரிதப்படுத்தல்,
உல்லை மீனவர் வாடி பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்,
மீனவர் கிராமங்களின் மின்சார வசதியை ஏற்படுத்தித்தரல்,
காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரல்,
வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்தல்,
சிலாபத்தில் சுட்டுக் கொலை செய்யப்ட்டவரின் குடும்பத்திற்கு நீதி வழங்கு போன்ற பல விடயங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது.

மேற்படி விடயங்களைத் தாங்கிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கிய வண்னம் பேரணியாக சென்றனர் .

protst ulla6

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட பேரணிக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோசம் எழுப்பினர்.

protst ulla4

 

protst ulla5

 

protst ulla3

Comments
Admin
By AdminFebruary 15, 2014 12:05Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

5 × 4 =