பொத்துவில் ஜுனியர் கொலிஜில் விடுகை விழாவும் நான்காண்டு நிறைவும்

Admin
By AdminDecember 9, 2013 17:22Updated

பொத்துவில் ஜுனியர் கொலிஜில் விடுகை விழாவும் நான்காண்டு நிறைவும்

J 1பொத்துவில் ஜுனியர் கொலிஜின் முன்பள்ளி மாணவர்களின் விடுகை விழாவும் நான்காண்டு நிறைவும் 2013.12.08ம் திகதி 02.00 மணிக்கு அக்/பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியின் ஆராதனை மண்டபத்தில் ஜுனியர் கொலிஜின் பணிப்பாளர் MIMA.அப்துல் கையூம் ஆசிரியர் அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு மற்றும் நிர்மாணம், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ MS.உதுமாலெவ்வை அவர்களும், கௌரவ அதிதிகளாக முன்னாள் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகரும், முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினரும், சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளருமான M.அப்துல் மஜீட் அவர்களும்,

J

 

பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் MSA.வாஸீத் அவர்களும், பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் AA.அப்துல் அஸீஸ் அவர்களும், விஷேட அதிதிகளாக அம்பாரை மாவட்ட முன்பளளி முகாமைத்துவ பணிப்பாளர் ALM.இப்றாகீம் அவர்களும் பொத்துவில் பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளருமான A.பதுர்க்கான் ஆசிரியர் அவர்களும்,

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் MS.முபாறக் ஆசிரியர் அவர்களும், சிறப்பதிதிகளாக MA.புகாரி அதிபர், AL.கமறுதீன்,NT.முபாறக் அலி ஆசிரியர், MS.அறுஸ் ஆசிரியர் அவர்கள்,AL.பதீயூதீன் ஆசிரியர் அவர்களும் பொத்துவில் சிரேஷ்ட சுகாதாரப் பரிசோதகர் MSM.மலிக் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது(கிராத் ஓதுதல், குரல் மாற்றி பேசுதல், நடனம், பாட்டு, ஆங்கில மற்றும் சிங்கள் பேச்சு). அதனைத் தொடர்ந்து தவிசாளர், பணிப்பாளர் அவர்களின் உரைகள் இடம்பெற்றது. தொடர்ந்து அம்பாரை மாவட்ட முன்பளளி முகாமைத்துவ பணிப்பாளர் அவர்களினால் பெற்றாருக்கு அறிவுரையான உரை இடம்பெற்றது.

அதாவது, சின்னஞ் சிறார்களின் சுதந்திர வேலைகளுக்கு இடங் கொடுக்குமாறும் அவர்களை பூரணக் கட்டுப்பாட்டிற்கு திணிக்க வேண்டாம் எனவும் வேண்டினார்.
அடுத்த கட்ட நிகழ்வாக பிரதம அதிதியான அமைச்சர் கௌரவ MS உதுமாலெவ்வை அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் கௌரவ அமைச்சர் கூறுகையில் அடுத்த வருடத்தில் இருந்து முன்பள்ளிகளுக்கான அபிவிருத்திகளை தொடருவதாக கூறினார்.
அதனைத் தொடரந்து கௌரவ அமைச்சர் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் M.அப்துல் மஜீட் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

J 1

 

 

J 2

 

j4

 

j5j6

 

j7

 

j8

 

j9

 

j10

 

j11

 

 

j12

 

j13

 

j14

 

j15

 

j16

 

 

j18

 

j19

 

j17

தகவல் : சம்சுல் ஹுதா

Comments
Admin
By AdminDecember 9, 2013 17:22Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

eleven − three =