பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

Admin
By AdminNovember 18, 2013 11:58

பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

mahinda-rajapakse_53

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று 68ஆவது பிறந்த நாளை கொண்டுகின்றார்.

டி.ஏ.ராஜபக்ஸ தம்பதியரின் மகனாக 1945 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ பிறந்தார்.

காலி ரிச்மண்ட் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர் கொழும்பு நாலந்தா மற்றும் தர்ஸ்டன் கல்லூரிகளிலும் தமது கல்விப் பயணத்தை முன்னெடுத்தார்.

தென்னிலங்கையின் புகழ்மிகு அரசியல்வாதியான தமது தந்தையின் மறைவை அடுத்து மக்கள் சேவைக்காக தம்மை அர்ப்பணித்த இளம் மஹிந்த ராஜபக்ஸ, செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.

president_nov18_tamil1968 ஆம் ஆண்டு பெலியத்த தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக தெரிவான அவர், 1970 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி மக்கள் ஆணையால் முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அன்றைய காலப் பகுதியில் மிகவும் குறைந்த வயதில் பாராளுமன்ற பிரவேசம் பெற்ற உறுப்பினர் என்ற பெருமையும் அவரையே சாரும்.

இதனிடையே சட்டக் கல்லூரியில் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஸ 1976 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

1983 ஆ் ஆண்டு ஷிரன்தி விக்ரமசிங்கவை கரம்பிடித்த அவர் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக நித்தமும் அர்ப்பணிப்புடன் செயற்பபட்ட மஹிந்த ராஜபக்ஸ 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் தொழில் அமைச்சராக பதவிவகித்தார்.

பின்னர் கடற்றொழில் அமைச்சராகவும் செயற்பட்ட அவர் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி ஆறாம் திகதி எதிர்க்கட்சி தலைவராக தெரிவானார்.

2004

 

ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்ற அந்த அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய மஹிந்த ராஜபக்ஸ இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அந்த வருடத்தில் தமது பிறந்தநாளை கொண்டாடினார்.

மூன்று தசாப்த யுதத்தத்திற்கு முடிவுகட்டிய ஜனாதிபதி 2009 ஆம் ஆம் ஆண்டில் நாட்டில் அமைதி ஏற்பட வழிவகுத்தார்.

பிராந்திய நாடுகளுக்கு முன்மாதிரியாக செயற்பட்டு அபிவிருத்திக்கான போராட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாட்டை ஆசியாவின் அதிசயமாக மாற்றும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

மக்கள் தம்மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையால் 2010 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவானார்.

மூன்று புதல்வர்களிதன் தந்தையாக மாத்திரமல்லாது நாட்டின் ஒட்டுமொத்த எதிர்கால சந்ததியினரதும்  பாதுகாவலராகவும் வழிகாட்டியாகவும் திகழும் ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஸவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Comments
Admin
By AdminNovember 18, 2013 11:58
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

twenty + five =