அல்- ஹூதா வித்தியாலயத்தில் முதலாம் வருட மாணவர்களுக்கான ஏடு துவக்க வித்தியாரம்ப விழா
பொத்துவில் உப வலயக்கல்வி அலுவலகத்தின் பிள்ளை நேயப் பாடசாலை அல்- ஹூதா வித்தியாலயத்தில் முதலாம் வருட மாணவர்களுக்கான ஏடு துவக்க வித்தியாரம்ப விழா இன்று (2015.1.20) வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச். சஹாப்தீன் தலைமையில் இடம் பெற்றது. இவ்வித்தியாரம்ப விழாவில் சிறப்பதிதிகளாக உப வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.அஸீஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.அப்துல் வஹாப், ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.,ப்றாகீம், ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.