தென்னிந்திய சினிமாவில் சாதனை படைக்கும் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்
விஜய் ஆண்டனியின் இசையிலும் நடிப்பிலும் வெளிவந்து வெற்றி பெற்ற ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை’ என்ற பாடலை எழுதி தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் பொத்துவில் அஸ்மின். அனைவரது கவனத்தையும் பெற்ற இந்த பாடலின் மூலம் தென்னிந்திய திரை உலகை